ஜெய்ராம் ரமேஷ்

எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்து, ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மோடி நாடகமாடுகிறார். அப்போது ஊழலுக்கு எதிராக அவர் இருப்பதாக கூறி கொள்வதெல்லாம் வெறும் வெத்துவேட்டு’ என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறி உள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;- ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆகிய எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்து ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக மோடி அரசு காட்டிக் கொள்கிறது.

ஜெய்ராம் ரமேஷ்

அதன் மூலம் ஊழலை சுத்தம் செய்வதாக மோடி கூறிக் கொள்கிறார். ஆனால் இதெல்லாம் வெறும் வெத்துவேட்டு. எதுவுமே உண்மையில்லை என்பதை சான்றுகள் காட்டுகின்றன.

தேர்தல் பத்திரங்கள் மூலம் மெகா மோசடி நடந்திருக்கிறது. தேர்தல் பத்திரம் மூலம் ரூ.4000 கோடி நன்கொடை பெறுவதற்காக ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை வேண்டிய நிறுவனங்களுக்கு ஒன்றிய பாஜக அரசு தந்துள்ளது.

தேர்தல் பத்திரம் வாங்கிய தேதிக்கும், ஒப்பந்தம் பெற்ற தேதிக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அதேபோல பல நிறுவனங்களை ரெய்டு மூலம் மிரட்டியும் நன்கொடை வசூலித்துள்ளனர். இதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.

அப்போது 30 நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை, சிபிஐயை ஏவி அதன் மூலம் ரூ.330 கோடி நன்கொடையை பாஜக திரட்டி உள்ளது. நிதிஷ் குமார் தடுமாறி விட்டார் என்பதற்காக இந்தியா கூட்டணி சரிந்து விட்டது என அர்த்தமில்லை.

ஜெய்ராம் ரமேஷ்

நிதிஷ் தடம் மாறியிருக்கலாம், மம்தா பானர்ஜி மம்தாவாகவே இருக்க முடிவு செய்திருக்கலாம். ஆனாலும் இந்தியா கூட்டணி மற்ற கட்சிகளுடன் வலுவாகத்தான் உள்ளது.

மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் மேற்கு வங்கத்தில் கூட்டணி இறுதி செய்யப்பட உள்ளது. அசாமில் 11 கட்சிகள் கூட்டணி வைத்துள்ளோம். உபியில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளோம்.

ஜெய்ராம் ரமேஷ்

எனவே, வரும் மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி 272 சீட்களுக்கு மேல் வென்று ஆட்சியை கைப்பற்றும். பாஜகவை வெளியேற்றும். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here