கோவை மாவட்டம், அடுத்த செல்வபுரம் பகுதியில் பழைய இருசக்கர வாகன விற்பனையில் ஈடுபட்டு வரும் தினேஷ் என்பவரிடம் கடந்த டிசம்பர் மாதம் இருசக்கர வாகனம் ஒன்றை அம்பிகா வாக்கி உள்ளார்.
அப்போது இருசக்கர வாகனத்தை வாங்கும் பொழுது தான் பெண் காவலர் என கூறி காவல்துறை அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை வழங்கி உள்ளார்.

இருசக்கர வாகனத்தை வாங்கிய பின் முறையாக E.M.I செலுத்தாமல் இருந்த நிலையில், வாகனத்தை விற்ற தினேஷ் வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் சென்று விசாரித்தார். அப்போது அம்பிகா என்ற பெயரில் பெண் காவலர் யாரும் இல்லை என்பது தெரியவந்தது.

இது குறித்து செல்வபுரம் காவல் நிலையத்தில் வாகன விற்பனையாளர் தினேஷ் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், போலி பெண் காவலர் அம்பிகாவையும் அவரது நண்பர் ரகு என்பவரையும் கைது செய்தனர்.

காவல்துறை உடை அணிந்து பலரையும் பெண் போலீசார் என கூறி அம்பிகா பலரையும் ஏமாற்றி இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரிடமும் செல்வபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.