கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் அருகே பகலில் கோவில் பூசாரியாகவும் இரவில் இருசக்கர வாகன கொள்ளையனாகவும் வளவந்த பூசாரி திருடன் கைது அவரிடம் இருந்து சுமார் 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், அடுத்த சங்கராபுரம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இருசக்கர வாகன திருட்டு அதிகமாக நடைபெற்று வருகிறது. இதனால் சங்கராபுரம் நகரப் பகுதிக்கு பொதுமக்கள் வருவதை தவிர்த்துள்ளனர்.
இதனை உடனடியாக தடுத்து நிறுத்தி இருசக்கர வாகன கொள்ளையர்களை உடனடியாக கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும் என சங்கராபுரம் சுற்றுவட்டார பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா உடனடியாக தனிப்படை அமைத்து இருசக்கர வாகன கொள்ளையர்களை கண்டுபிடித்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
அதன் பெரில் சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளர் சத்தியசீலன் மற்றும் உதவி ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தொடர்ந்து தனிப்படை போலீசார் இருசக்கர வாகன கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.
அப்போது பூட்டை சாலையில் இருசக்கர வாகன சோதனையில் ஈடுபட்ட போது கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் கிராமத்தைச் சேர்ந்த சிவராமன் மகன் ராஜேஷ் என்பவர் பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்தார்.

அவரை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்குப் பின் முரணான பதில் பேசியதால் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்த போது திடுக்கிடும் தகவல் வெளியாகிது. ராஜேஷ் கனியாமூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் பூசாரியாக வேலை செய்து வருவதாகவும்,
பகல் முழுக்க கோவிலில் பூசாரி வேலை செய்வதாகவும், இரவு நேரங்களில் தொடர்ந்து இருசக்கர வாகன கொல்லையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார். போலீசாரையே சற்று யோசிக்க வைத்துள்ளார். இந்த கோவில் பூசாரி இதுவே கடந்த 2 ஆண்டுகளாக வேலையாக வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் வெள்ளி, செவ்வாய் 2 தினங்களிலும் இருசக்கர வாகன திருட்டில் உயிரே போனாலும் ஈடுபட மாட்டாராம் இந்த பூசாரி திருடன் எங்கு இருசக்கர வாகனம் திருட போனாலும் காவி வேட்டி பூட்டியிருக்கும் இருசக்கர வாகனத்தை திறக்க டூல்ஸ்களை வைக்க ஒரு பேக்கை மாட்டிக் கொண்டு செல்வார் இந்த பூசாரி திருடன்.
இதனை அடுத்து இவர் மீது வந்தவாசி முசிறி வீராணம், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, தியாகதுருவம் வரஞ்சாரம், திருக்கோவிலூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதும் தெரியவந்தது.

இவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு காவல்துறையினர் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். ஒரு கோவில் பூசாரி ஒருவர் பகல் நேரங்களில் பூசாரி ஆகவும், இரவு நேரங்களில் இருசக்கர வாகன கொள்ளையனாகவும் வலம் வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.