Kadamalaikundu : இரு குடும்பத்துக்கு இடையே ஏற்பட்ட தகராறு.. கட்டையால் அடித்து தாக்குதல் – 5 பேர் கைது..!

2 Min Read

கடமலைக்குண்டு கிராமத்தில் கழிவுநீர் செல்வதில் ஏற்பட்ட தகராறில் இரு குடும்பத்துக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் கட்டையால் அடித்து தாக்கிய காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பு. இந்த சண்டையில் கட்டையால் தாக்கிய 5 பேரை கடமலைகுண்டு போலீசார் கைது செய்தனர்.

- Advertisement -
Ad imageAd image

தேனி மாவட்டம், அடுத்த ஆண்டிப்பட்டி தாலுகா, கடமலைக்குண்டு அருகே உள்ள கரட்டுப்பட்டி கிராமத்தில் பாலமுருகன் என்பவரின் வீட்டில் ஒத்திக்கு சசிக்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இரு குடும்பத்துக்கு இடையே ஏற்பட்ட தகராறு.. கட்டையால் அடித்து தாக்குதல்

வீட்டில் கழிவுநீர் செல்வதில் இரண்டு குடும்பத்திற்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பாலமுருகன் மனைவி ஜெயலட்சுமி, சசிக்குமார் குடும்பத்தினரை ஜாடை பேசியதாக தெரிகிறது.

அப்போது சசிக்குமார் வீட்டிற்கு மஞ்சுனூத்து கிராமத்தை சேர்ந்த உறவினர்கள் குமரேசன், அபிமன்யூ, விக்னேஷ், மனோஜ், மதன் ஆகியோர் வந்தனர்.

இரு குடும்பத்துக்கு இடையே ஏற்பட்ட தகராறு.. கட்டையால் அடித்து தாக்குதல்

தனது உறவினரான சசிக்குமார் குடும்பத்தினருடன் அடிக்கடி சண்டையில் ஈடுபட்ட ஜெயலட்சுமி, அவருடைய அண்ணன் வாசககுமார், மாமா மாலியன் ஆகியோரை அசிங்கமாக பேசி, கம்பு, மண்வெட்டி பிடி, கட்டை, கம்பியை கொண்டு சரமாரியாக தாக்கினர்.

இரு குடும்பத்துக்கு இடையே ஏற்பட்ட தகராறு.. கட்டையால் அடித்து தாக்குதல்

இந்த காட்சியை அப்பகுதியை சேர்ந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர். அந்த காட்சியில் ஜெயலட்சுமி, வாசககுமார், மாலியன் ஆகியோரை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கும் காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரு குடும்பத்துக்கு இடையே ஏற்பட்ட தகராறு.. கட்டையால் அடித்து தாக்குதல்

இந்த சம்பவம் குறித்து ஜெயலட்சுமி கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜெயலட்சுமி மற்றும் குடும்பத்தினரை தாக்கிய 5 பேரை கைது செய்தனர்.

இரு குடும்பத்துக்கு இடையே ஏற்பட்ட தகராறு.. கட்டையால் அடித்து தாக்குதல்

மேலும் படுகாயம் அடைந்த ஜெயலட்சுமி, வாசககுமார், மாலியன் ஆகியோர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கடமலைக்குண்டு போலீசார்

குடும்பத்தினரை ஆயுதங்களால் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் கடமலைக்குண்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a review