ஐடி சோதனையில் கர்நாடகா ஒப்பந்ததாரரின் வீட்டில் 42 கோடி ரூபாய் பறிமுதல் 

3 Min Read
கணக்கில் வராத பணம்

கர்நாடகாவில் இரண்டு ஒப்பந்ததார்களின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் (ஐடி) நடத்திய சோதனையில் ரூ.42 கோடிக்கும் அதிகமான ரொக்கப் பணம் மீட்கப்பட்டுள்ளது. பெங்களூருவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பிஎஸ்ஆர் இன்ஃப்ராடெக் மற்றும் ஸ்டார் இன்ஃப்ராடெக் நிறுவனங்களின் வளாகங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

- Advertisement -
Ad imageAd image

ஒப்பந்ததாரர்கள் வரி ஏய்ப்பு மற்றும் பண மோசடியில் ஈடுபட்டதாக ஐடி குற்றம் சாட்டியுள்ளது.இந்த சோதனையின் போது குற்றவியல் ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களை கைப்பற்றியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் இன்னும் சில நாட்களில் ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வருமான வரித்துறையினரின் இந்த சோதனை கர்நாடகாவின் ஆளும் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே அரசியல் மோதலை தூண்டியுள்ளது .

அஸ்வத் நாராயண்

கர்நாடகா மாநில தலைநகரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியிலிருந்து கணக்கில் வராத பணம் பெருமளவில் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து தீவிரமான தேடுதல் நடவடிக்கைகள் நடந்து வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் PTI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர் .
அந்த குடியிருப்பு ஆளில்லாமல் இருந்ததாகவும், ஏராளமான அட்டைப் பெட்டிகளில் சட்டவிரோதமாக பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது .

42 கோடி ரூபாய்க்கும் அதிகமான கணக்கில் வராத ரொக்கத்தை மீட்டு இன்னும் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில் வருமான வரித்துறையினர் , பண பதுகளுக்கான நோக்கம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் . அண்டை மாநிலமான தெலுங்கானாவில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுடன் இந்த கணக்கில் வராத பணத்திற்கு தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

ரவிக்குமார்

கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சரும், தற்போதைய பாஜக தலைவருமான சி என் அஸ்வத் நாராயண், காங்கிரஸ் அரசாங்கத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஐந்து மாநிலங்களில் நடக்கவிருக்கும் தேர்தலில் வாக்காளர்களுக்கு நிதியளிக்கும் நோக்கத்தில், இந்த பணம் காங்கிராசரால் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பகிரங்க குற்றசாட்டை அவர் முன்வைத்துள்ளார் .

தற்போது பிடிபட்டுள்ளது வெறும் சிறிய அளவிலான தொகையே , இது ஒரு சாம்பிள் தான் , இதுபோல பெரிய அளவிலான தொகை காங்கிரஸ் கட்சியினரால் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது , இந்த பண பதுக்கல் பற்றி சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அஸ்வத் நாராயண் பேசியுள்ளார் .

பாஜக தலைவரும் என்.ரவிகுமார், ஹைதராபாத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது, ​​ஒப்பந்ததாரர் ஒருவரின் இடத்தில் இருந்து அதிரடியாக ரூ.42 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். 23 அட்டைப்பெட்டிகளில் பதுக்கிவைக்கப்பட்டு இருக்கும் இந்த ரொக்கப்பணமானது அனைத்தும் 500 ரூபாய் மதிப்புள்ளவை.

நடக்கவிருக்கும் தெலுங்கானா தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சமாக விநியோகிக்க இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன . இந்த வழக்கை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். அவரது குற்றச்சாட்டுகள் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பல பாஜக தலைவர்களின் இதே போன்ற குற்றச்சாட்டுகளை எதிரொலிக்கிறது.

முதல்வர் சித்தராமையா

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, கர்நாடகா மாநில காங்கிரசுக்கும் இந்த பறிமுதல் செய்த பணத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை . லஞ்சம் வாங்கவோ , கொடுக்கவோ எங்களுக்கு அவசியம் இல்லை . பாரதிய ஜனதா கட்சியினர் பொய்யான குற்றசாட்டை முன்வைத்துள்ளனர் . அவர்களது குற்றச்சாட்டுக்கு எந்தஒரு ஆதாரமும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார் .

ஐடி ரெய்டுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த துணை முதல்வர் டிகே சிவக்குமார், “அரசியல் தலையிடு இல்லாமல் ஐடி வராது. நடப்பது அரசியல் , சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் பிற மாநிலங்களில் என்ன நடக்கிறது என்பது எங்களுக்கும் தெரியும். பாஜக ஆட்சியில் இருக்கும் இடத்தில் எதுவும் நடக்காது; பாஜக ஆட்சியில் இல்லாத இடங்களில் இதுபோன்ற சோதனைகள் நடத்தப் பட்டுவருகின்றன “. என்று அவர் தெரிவித்துள்ளார் .

தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் நவம்பர் 7 முதல் 30-ஆம் தேதிக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

Share This Article
Leave a review