- தஞ்சை மாவட்டத்தில் இரண்டு நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக அம்மாபேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளன இதனால் நெல்மணிகள் முளைக்கும் அபாயம் ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தஞ்சை மாவட்டத்தில் சுமார் 61 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் ஆழ் குழாய் பாசனம் மூலம் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருந்தன.
தற்போது மாவட்ட முழுவதும் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக அம்மாபேட்டை சாலியமங்களம் உடையார் கோவில் விழுதூர், குழிமாத்தூர். உள்ளிட்ட கிராமங்களில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளன.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெல் மணிகள் முளைக்கும் அபாயம் ஏற்படும் என வேதனை தெரிவிக்கும் விவசாயிகள்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/navratri-teppath-festival-large-number-of-devotees-participate-in-swami-darshan-special-abhishekam-to-swami-amba/
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதத்தை தளர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும்.அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் உலர் கலன்கள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் வயலில் சாய்ந்து கிடக்கும் நெல் பயிர்களை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.