நவராத்திரி தெப்பத் திருவிழா, திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்.சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம்.

1 Min Read
  • திருக்கருக்காவூர் முல்லைவனநாதர் உடனுறை, ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் திருக்கோவில்..

நவராத்திரி தெப்பத் திருவிழா, திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்..

- Advertisement -
Ad imageAd image

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அமைந்துள்ள திருக்கருக்காவூர் கர்ப்ரட்சாம்பிகை உடனுறை முல்லைவனநாத சுவாமி
திருக்கோவில், நவராத்திரி தெப்ப திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில், சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து இரவு சுவாமி அம்பாள் தெப்பத்திற்கு எழுந்தருளி, தெப்பத்தில் சுற்றி வந்து, சிறப்பு தீபாரனையும், வானவேடிக்கையும் நடைபெற்றது. விழாவி்ல் திருக்கருக்காவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். ஏற்பாடுகளை திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.

திருக்கடாவூர் வெள்ளடயீஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடல் பெற்ற சோழ நாட்டு காவிரி தென்கரை தலம் சிவன் கோவிலாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்தில் காவிரி வெட்டாற்று கரையில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும்.

பசியோடிருந்த சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும் நீரும் தந்து பசிபோக்கிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தேவாரப்பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 18-ஆவது சிவத்தலமாகும்.

ஊர்த்தவ மகரிஷியின் சாபத்தால் நித்துவரின் மனைவி வேதிகைக்கு ஏற்பட்ட கருச்சிதைவை இறைவன் மருத்துவம் பார்த்து அவள் கருவைக் காத்ததால் – கருகாவூர் என்று பெயர் பெற்றது.

கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/firefighters-explained-the-process-on-the-occasion-of-international-disaster-reduction-day/

திருக்களாவூர் என மக்களால் பொதுவாக அழைக்கப்பெறும் இத்தலம் மாதவி வனம், முல்லைவனம், திருக்கருகாவூர், கர்ப்பபுரி என்று பல பெயர்களால் நூல்களில் குறிப்பிடப்படுகிறது. மாதவி (முல்லைக்கொடி)யை தலவிருட்சமாகக் கொண்டுள்ளதால் மாதவி வனம் (முல்லை வனம்) என்றும், கரு+கா+ஊர். கரு-தாயின் வயிற்றில் உள்ள (குழந்தைக்) கரு, கா-காத்த (காக்கின்ற), ஊர்-ஊர், கருகாவூர் எனப் பெயர் பெற்றது.

 

Share This Article
Leave a review