86 கோடி ஒதுக்கி கட்டப்பட்ட புதிய எல்லீஸ் தடுப்பணை தரம் குறித்து பொதுமக்கள் எழுப்பிய சந்தேகத்தை அடுத்து . இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி நேரில் ஆய்வு மேற்கொண்டார் .
கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாய்ந்து வரும் தென்பெண்ணை ஆறு திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கட்டு மூலமாக தண்ணீர் திறந்து விடப்பட்டு விழுப்புரம் கடலூர் மாவட்டங்களில் பாய்ந்து ஓடி கடலில் கலக்கிறது இதற்கிடையில் உள்ள 300க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு நீர் பாசன வசதி ஏற்படுத்தி தந்து கொண்டிருக்கிறது தென்பெண்ணை ஆறு .
இந்நிலையில் ஏனாதிமங்கலம் என்ற கிராமத்தில் கட்டப்பட்டுள்ள எல்லீஸ் தடுப்பணை சென்ற மழைக்காலத்தில் முற்றிலுமாக உடைந்து போனது.

இதற்கு மாற்று ஏற்பாடாக அந்த பகுதியில் புதிய அணை கட்டும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு , ரூபாய் 86 கோடி ஒதுக்கீடு செய்தது .
அணைக்கட்டும் பணி ஏறத்தாழ முழுமை அடைந்து விட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழை காரணமாக அணை கட்டப்பட்டுள்ள ஆற்றங்கரை ஓரம் வலுவிழந்து இருப்பதாக அந்த பகுதி கிராம் மக்கள் புகார் அளித்தனர் .
மேலும் அணை உறுதித் தன்மை பற்றி பொதுமக்கள் சந்தேகம் எழுப்பி இருந்த நிலையில் இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் , அணைக்கட்டும் பணி 99 சதவீதம் நிறைவடைந்து விட்டது இன்னும் நான்கு ஐந்து நாட்களில் பணிகள் முழுவதும் முடிவடையும் என ஆட்சியர் அறிவித்தார் .
மேலும் பேசிய அவர் எல்லிஸ் அணைக்கட்டு மூலம் சுமார் 13,000 ஏக்கர் பாசன வசதி பெறும் , சுமார் 13 ஏரிகள் நீர் பாசன வசதி பெறும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். விரைவில் பணி முடிக்கப்பட்டு அமைச்சர்கள் முன்னிலையில் அணை திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் .
கொஞ்சம் இதையும் படிங்க: https://thenewscollect.com/its-been-six-months-still-no-post-has-been-given-vijayadharani-speech-in-bjp-public-meeting-caused-a-stir-at-chennai/
அணையின் உறுதித் தன்மை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது ஆய்வு செய்யப்பட்டு தான் அணை கட்டப்பட்டுள்ளதாகவும் இருந்தபோதிலும் தற்போதய நிலை குறித்து வல்லுநர்கள் ஆய்வு மேற்கொண்டு வருவதாக ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.