பாஜகவுக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகியும் இன்னும் தனக்கு பதவி தரவில்லை என்று சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவுக்கு கட்சியில் இணைந்த விஜயதாரணி பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாக காங்கிரஸ் சார்பில் சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்துடுக்க பட்டவர் விஜயதாரணி .
அந்த காலகட்டத்தில் அவருக்கு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் அல்லது தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் , இந்த இரண்டு பதவிகளில் ஏதுனும் ஒரு பதவி கிடைக்கும் என்று எதிர்பார்ப்போடு இருந்தார் . அது எட்டா கனியாக மாறவே , 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னரே தந்து எம்எல்ஏ பதிவியை ராஜினாமா செய்துவிட்டு , காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜக கட்சியில் இணைந்தார் .

விஜயதாரணிக்கு அந்த சமயத்தில் பாஜக வில் , எம்பி சீட் வழங்கப்படும் என்று பேசப்பட்ட நிலையில் , பாராளுமன்ற தேர்தலில் அவருக்கு பாஜக வில் வாய்ப்பு மறுக்கப்பட்டது .
தனது எம்எல்ஏ பதிவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜக வில் இணைந்ததால் தனக்கு ஏதுனும் முக்கிய பொறுப்பு அல்லது பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பில் இருந்து வரும் விஜயதாரணி , தனது ஆதங்கத்தை பாஜக முக்கிய நிர்வாகிகள் முன்னரே கொட்டி தீர்த்தார் .
தமிழக பாஜக சார்பில் நேற்று சென்னை YMCA மைதானத்தில் ‘தமிழகம் மீட்போம், தளராது உழைப்போம்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மாநில தலைவர் மற்றும் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பல மூத்த பாஜக தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் விஜயதாரணி பேசுகையில், “3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நான் இருந்த பதவியை உதறி தள்ளிவிட்டு பாஜகவுக்கு வந்திருக்கிறேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நான் வரவில்லை, எதிர்பார்ப்போடு தான் வந்திருக்கிறேன். நன்றாக உழைக்க வேண்டும், கட்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக பதவி தேவை.
கொஞ்சம் இதையும் படிங்க: https://www.thenewscollect.com/the-auto-driver-who-spied-on-former-bahujan-samaj-party-head-armstrongs-murder-was-admitted-to-the-hospital-due-to-chest-pain-on-monday/
நன்றாக உழைக்க வேண்டும், கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது, ஆனால் அதற்கு பதவி தேவை, நான் கட்சிக்கு வந்து ஆறு மாதம் ஆகிவிட்டது, ஆனாலும் இன்னும் எனக்கு எந்த பதவியும் கொடுக்கவில்லை. எனக்கு நல்லது செய்வார்கள். என்னை போன்றவர்கள் பணியை பாஜக நிச்சயம் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கிறேன்’ என்று வெளிப்படையாக தந்து ஆதங்கத்தை கொட்டி தீர்த்தர் . விஜயதாரணி நேரடியாக தனக்கு பதவி கொடுக்க வேண்டும் என பொது மேடையிலேயே கோரிக்கை வைத்துள்ள சம்பவம் தமிழ்நாடு பாஜக-வில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.