கொடநாடு கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் யார்? என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். வழக்கு விசாரணையை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தினார். தி.மு.க. அரசு உரிய நடவடிக்கையை எடுத்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள வருவாய் மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.
இந்நிலையில் தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ என்ற பாடலுக்கு ஏற்ப மூதாட்டி ஒருவர் ஒரு பெண்ணின் முந்தானையை பிடித்து கொண்டு குதிரையில் அமர்ந்து சவாரி செய்வது போல பாவனையுடன் நடனம் ஆடி கூட்டத்தினரை கவர்ந்தார்.
தஞ்சையில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் மற்றும் அ.ம.மு.க.வினர் சார்பில் கொடநாடு குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்திஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் தொடங்குவதற்கு முன்னர் எம்.ஜி.ஆர் பட பாடல்கள் ஒலிப்பரப்பபட்டன.
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என்ற பாடல் ஒலிப்பரப்பானதும் மூதாட்டி ஒருவர் உணர்ச்சி மிகுதியில் முன்னால் நின்று இருந்த பெண்ணின் முந்தானையை இழுத்து பிடித்து, குதிரையில் அமர்ந்து சவாரிசெய்வது போல நடனம் ஆடி கூட்டத்தினரை கலகலப்பாக்கினார்.