திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் கொடநாடு கொள்ளை மற்றும் கொலை வழக்குகளை உடனடியாக விசாரித்து குற்றவாளிகளை கைது செய்வதாக தேர்தலின் போது அறிவித்திருந்தது திமுக அதன் முதலமைச்சர் ஸ்டாலின். ஆனால் இதுவரை அந்த வழக்கில் ஒரு முன்னேற்றமும் காணப்படவில்லை. வாக்குறுதிகள் காற்றில் பறந்து போயின அந்த வழக்கை உடனடியாக விசாரித்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் விசாரணை தீவிரப்படுத்தி உண்மை குற்றவாளியை நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும் எனமாநிலம் மருத்துவ அணி இணை செயலாளர் யோகேஸ்வரன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினார்.
வேண்டி திமுக அரசை வலியுறுத்தி அதிமுக மாவட்ட செயலாளர் செஞ்சி சேவல் ஏழுமலை தலைமையில் விழுப்புரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கழக பொருளாளர் காமராஜர் பெருமாள்,மாவட்ட கழக துணை செயலாளர் கலைச்செல்வன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ராஜேந்திரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தெற்கு மாவட்ட கழக செயலாளர் முத்து உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கின் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர் இதில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.