டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன்..!

2 Min Read

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாப்ரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் ஆனது. கடந்த 11 ஆண்டுகளுக்கு பின் இரண்டாவது முறை சாம்பியன் பட்டத்தை பெற்றது.

- Advertisement -
Ad imageAd image

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணி மோதியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான விராத் கோஹ்லி, ரோகித் சர்மா பவுண்டரிகள் அடித்து அசத்தினர்.

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன்

கேஷவ் மஹாராஜ் பந்து வீச்சில் 9 ரன்னில் அவுட் ஆனார் ரோகித் சர்மா. அடுத்து வந்த ரிசப்பந்த் (0) டக் அவுட் ஆனார். அடுத்து வந்த சூர்யகுமார் 3 ரன்களுக்கு கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அக்ஷர் பட்டேல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 47 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

விராத் கோஹ்லி (76) நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார். முடிவில் இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன் எடுத்தது. இந்த நிலையில் தென்னாப்ரிக்கா அணிக்கு 177 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்திய அணி.

177 ரன்கள் இலக்காகக்கொண்டு பின்னர் களமிறங்கிய தென்னாப்ரிக்கா அணியின் க்ளாசன் (52) அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்து அவுட் ஆனார். குயின்டன் டிகாக் 39 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன்

இறுதியில் தென்னாப்ரிக்கா அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்னில் தோல்வியடைந்தது. பும்ரா, அர்ஷ்தீப் சிங், மற்றும் பாண்ட்யா அசத்தல் பந்து வீச்சால் தென்னாப்பிரிக்கா அணி சுருண்டது.

ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், பும்ரா, அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் கடந்த 11 ஆண்டுகளுக்கு பின் இரண்டாவது முறையாக ‛சாம்பியன் பட்டம் வென்றது.

இந்திய அணியின் விராட் கோஹ்லி டி20 தொடர்களிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த போட்டி எனது கடைசி போட்டி எனவும் தெரிவித்தார். கோஹ்லியை தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மாவும் டி20 தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன்

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா அறிவித்தார். டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு கோலி, ரோகித் ஷர்மாவை தொடர்ந்து ஜடேஜாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்தியா சம்பியன் பட்டம் பெற்றதை நாடு முழுதும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

Share This Article
Leave a review