ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் உடனடியாக மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தத்தை கொண்டுவர வேண்டும் மற்றும் காஸாவிற்கு அடிப்படை உதவிகளை வழங்கிட கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜோர்டான் நாட்டால் முன்மொழியப்பட்ட இந்த தீர்மானத்தில் , தீர்மானத்திற்கு ஆதரவாக 120 நாடுகள் வாக்களித்தன, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உட்பட 14 நாடுகள் எதிராக வாக்களித்தன, இந்திய கனடா உற்பட 45 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர் .
இந்நிலையில் ஒக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஹமாஸை மிகவும் வெளிப்படையாகக் கண்டித்து, ஹமாஸ் ஆயுத குழுவால் சிறை வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை உடனடியாக விடுவிக்கக் கோரும் ஒரு திருத்தத்தை கனடா அறிமுகப்படுத்தியுள்ளது.
கனேடிய சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது, துனிசியாவைத் தவிர அனைத்து அரபு நாடுகளும் இந்த தீர்மானத்தை எதிர்த்துள்ளது .
முக்கிய தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் விளக்கத்தில், ஐ.நா.வுக்கான இந்தியாவின் துணை நிரந்தர பிரதிநிதி யோஜ்னா படேல், “காசாவில் நடந்து வரும் மோதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளான செயல்., பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் உயிரை பறிகொடுத்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார் .
பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதிலும், நடந்து வரும் மோதலில் பொதுமக்கள் உயிர் இழப்புகள் அதிகரித்து வருவது குறித்தும் இந்தியா ஆழ்ந்த கவலையில் உள்ளது” என்றும், “இரு நாட்டு போரினை தீவிர படுத்துவது மூலம் மனிதாபிமான நெருக்கடியை மேலும் அதிகப்படுத்தும்” என்று அவர் மேற்கோளிட்டு காட்டியுள்ளார் .
ஆனால் உண்மையில் இந்தியா ஏன் வாக்களிக்கவில்லை என்று தெளிவாக அவர் தெரிவிக்கவில்லை என்பதே நிஜம் அன்று ஆதரவு நாடுகள் இந்தியாவை விமர்சனம் செய்து வருகின்றனர் .
ஹமாஸை கண்டிக்கும் திருத்தத்தை ஆதரித்த போதிலும், இந்தியாவின் பிரதிநிதி அந்த அமைப்பின் பெயரைக் குறிப்பிட வில்லை “அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிர்ச்சியளிப்பதாகவும், கண்டனத்துக்கு உரியதாகவும் இருந்தது.
ஆயுத குழுவால் கைது செய்யப்பட்ட பணயக்கைதிகள் விடிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எங்கள் மனதில் ஓடி கொண்டு இருக்கிறது . அவர்களை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பயங்கரவாதம் ஒரு கொடிய செயல் அவற்றுக்கு எல்லைகள், தேசியம் , இனம் என்று ஒன்றும் தெரியாது. பயங்கரவாதச் செயல்களின் எந்த நியாயத்தையும் உலகம் ஏற்க கூடாது. வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒன்றுபடுவோம், பயங்கரவாதத்திற்கு சகிப்புத்தன்மை இல்லாத அணுகுமுறையைக் கடைப்பிடிப்போம் என்று யோஜ்னா படேல் தெரிவித்துள்ளார் .
பெருகிவரும் உயிரிழப்புகள் ! பாதுகாப்பு கவுன்சிலில் முட்டுக்கட்டை !!
கடந்த இரண்டு வாரங்களாக, அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா , மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காணும் எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றாத வண்ணம் தடுக்க தங்கள் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி வருகின்றன .
அக்டோபர் 18 அன்று, பாதுகாப்பு கவுன்சிலில் பிரேசில் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சமர்ப்பித்த வரைவு தீர்மானத்தை அமெரிக்கா தடை செய்தது, இது “மனிதாபிமான இடைநிறுத்தம்” என்று அழைப்பு விடுத்தது.
காசாவில் இருந்து தெற்கு இஸ்ரேலுக்குள் ஹமாஸ் ஊடுருவலைத் தொடங்கியபோது மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நெருக்கடி அதிகரித்தது, இதன் விளைவாக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உட்பட 1400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மேலும் ஹமாஸ் குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான இஸ்ரேலிய வீரர்களைக் கைப்பற்றியதைத் தவிர, 220 க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய மற்றும் வெளிநாட்டினரைக் கடத்தி மீண்டும் காசாவிற்கு அழைத்துச் சென்றது – இது சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறுவதாகும்.
பாலஸ்தீன சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி , அப்போதிருந்து, இஸ்ரேல் காசா மேல் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது, இதனால் 7,326 பேர் கொல்லப்பட்டனர் (அக்டோபர் 27 வரை) .
மேலும் உணவு, எரிபொருள், மின்சாரம், மருத்துவப் பொருட்கள் மற்றும் தண்ணீர் விநியோகம் ஆகியவற்றில் இஸ்ரேல் தடையை விதித்துள்ளது, குறைந்த அளவிலான உணவு மற்றும் மருத்துவ உதவிகள் மட்டுமே எகிப்தின் எல்லையில் உள்ள ரஃபா வழியாக காசாவிற்கு அனுப்ப அனுமதி அளித்து வருகிறது .
அக்டோபர் 7 அன்று காஸாவின் தாக்குதலுக்கு முதல் ஆதரவு பிரதமர் நரேந்திர மோடியின் ட்வீட் வடிவத்தில் வந்தது, அவர் இஸ்ரேலுடன் “ஒற்றுமையை” வெளிப்படுத்தினார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசிய மோடி இதை மேலும் தனது ஆதரவை வலுப்படுத்தினார் .
ஒரு வாரத்திற்கு பிறகு காசாவில் உள்ள அல்-அஹ்லி பாப்டிஸ்ட் மருத்துவமனையில் நடத்தப்பட்ட தாக்குதலில் 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர் . இந்த தாக்குதல் குறித்து பிரதமர் மோடி பாலஸ்தீனிய ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸுடன் பேசினார். குறிப்பாக பாலஸ்தீன பிரச்சினை மற்றும் இரு நாடுகளின் சமாதான போர் தீர்வுக்கான தனது ஆதரவை மீண்டும் வலியுறுத்த இந்தியா இந்த வாய்ப்பைப் பயன்படுத்தியது.
மருத்துவமனை மீது குண்டு வீசியதை இஸ்ரேல் மறுத்தது , ஆனால் அல்-அஹ்லியில் நடந்த கொடிய வெடிகுண்டு தாக்குதல் பாலஸ்தீனிய ராக்கெட்டின் விளைவாக ஏற்பட்டது தான் என்று இஸ்ரேல் வாதிட்டது .
இந்த வாரம், ஜோர்டான் மன்னர் அப்துல்லாவுடன் மோடி உரையாடினார் அப்போது மனிதாபிமான மற்றும் பாதுகாப்பு நிலைமைக்கு “முன்கூட்டிய தீர்வு” தேவை என்று அவர் குறிப்பிட்டார் .