நாடாளுமன்றத்தில் இந்த மாதிரி பொய் சொல்ற முதல்வரை நான் …

2 Min Read

கோவை மாவட்டம் அடுத்த மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் நடைபெற நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. அப்போது நவீன வசதிகளுடன் பயணிகள் அமர குளிர் சாதன வசதிகளுடன் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ள நிலையில் ஆ. ராசா எம்.பி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

- Advertisement -
Ad imageAd image
ஆ. ராசா

அதனை தொடர்ந்து சிக்கதாசம்பாளையம் ஊராட்சி சேரன் நகர் பகுதியில் ஒரு கோடியே 70 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார் பின்னர் அங்கு மக்களிடம் பேசிய ஆ. ராசா;-

தமிழக முதல்வருக்கு இருக்கின்ற பணி தமிழகத்திற்கு, மேட்டுப்பாளையத்திற்கு நல்லது செய்ய வேண்டும், என்பது மட்டுமல்ல, இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்ற மிகப்பெரிய பணி இருக்கிறது. நான் டெல்லியில் 25 ஆண்டுகாலமாக இருக்கிறேன்.

நாடாளுமன்றத்தில் இந்த மாதிரி பொய் சொல்ற முதல்வரை நான் பார்த்ததில்லை – ஆ.ராசா

நாடாளுமன்றத்தில் இது போன்று பொய் சொல்லக்கூடிய முதல்வரை நான் பார்த்தது இல்லை என பேசினார். அப்போது அருகே இருந்தவர் பிரதமர் என சொன்னதும். நான் இந்த மாதிரி பொய் சொல்லக்கூடிய பிரதமரை நாடாளுமன்றத்தில் இதுவரை பார்த்ததே இல்லை என மாற்றி பேசினார்.

தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி,சென்னை போன்ற பெரும் வெள்ளம் ஏற்பட்டு மாநிலமே கடுமையாக பாதிக்கப்பட்ட போது தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

ஆ.ராசா

தமிழக அரசு கேட்ட 37 ஆயிரம் கோடி, நிதி கேட்ட போது வழக்கமாக மாநிலங்களுக்கு வழங்கும் நிதிக் குழு மானியத்தை மட்டுமே அளித்து விட்டு அது தான், இது இது தான் அது செந்தில் கவுண்டமனி செய்யும் வாழைப்பழம் காமெடி போல சொன்னதையே திரும்ப திரும்ப நிர்மலா சீதாராமன் கூறுவதாக குற்றம்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் இந்த மாதிரி பொய் சொல்ற முதல்வரை நான் பார்த்ததில்லை – ஆ.ராசா

மேலும் 37 ஆயிரம் நிவாரணம் நிதி கேட்டும் ஒரு பைசா கூட தராத மத்திய அரசும் பிரதமர் மோடியும் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது வேடிக்கையாக உள்ளது. இப்படிபட்ட ஒரு பிரதம அமைச்சரை நான் 25 ஆண்டுகளில் பார்க்கவில்லை என்று கூறிய கூறினார்.

ஆ.ராசா

அதுமட்டுமின்றி பணத்தை கேட்டால் ஜெய் ஸ்ரீராம் என கூறினார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கேட்டால் பாரத் மாதாகு கி ஜே என கூறுவதாகவும் இந்த இரண்டு கோஷங்களை போடுவதாக தமிழகத்தில் சாமியை காட்டி பூச்சாண்டி காட்டுவதால் தொடர்ந்து இந்த பாஜக அரசியலை தமிழகமும், முதல்வரும் எதிர்ப்பதாக விமர்சித்தார்

Share This Article
Leave a review