மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் காளியம்மாளை ஆதரித்து கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோவில் முன்பு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய போது;-

அடுத்த தலைமுறை நன்றாக வாழ வேண்டும் என நாம் சிந்தித்து செயல்பட வேண்டும். ஒரு நாட்டில் விவசாயிகள் நன்றாக வாழ்ந்தால் தான் நாடு. விவசாயிகள் கடன் வாங்கி வாழ்ந்தால் சுடுகாடு.

நாடாளுமன்ற தேர்தல்

நாட்டில் கட்டுக்கடங்காத நிலையில் விலை ஏற்றம் உயர்ந்துள்ளது. அப்போது விலையை வாசி என்று அர்த்தம் உள்ளதால் அதற்கு விலைவாசி என்று பெயரானது. இந்த நிலையில் அரிசி, பருப்பு, மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, என்று அனைத்து விலை உயர்வாலும் மக்கள் வாடி வதங்குகின்றனர்.

நீங்கள் வாழ்வது வரி கட்டுவதற்காக தான். வரலாற்றில் தனிமனிதன் தான் ஒவ்வொரு மாற்றத்தையும் உருவாக்குகின்றான். நாம் தமிழர் கட்சியால் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்க முடியும்.

சீமான்

இந்திய நாட்டை சீரழித்ததற்கு இரண்டு முக்கிய கட்சிகளே காரணம். ஒன்று காங்கிரஸ் இன்னொன்று பாஜக. இந்த இரண்டு கட்சிகளுக்கும் துணை போனது திமுகவும், அதிமுகவும். காரணம் சுயநலம். பின்னர் மாநில உரிமைகள் பறிபோகிறது என்று புலம்புவது இவர்களது வேலை.

மத்திய அரசோடு பதவியில் இருந்தீர்களே அப்பொழுது என்ன செய்தீர்கள்? ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழ்நாட்டுக்கு கொடுக்க மாட்டேன் என கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் கூறுகிறார்.

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் – சீமான்

அவரது தேர்தல் வெற்றிக்கு தமிழக முதலமைச்சர் அங்கு சென்று வேலை பார்க்கிறார். ஆதரவு கேட்கிறார் இது நியாயமா? 9000 கோடியில் காவிரியை மறித்து மேகதாதுவில் அணை கட்டுவேன் என சொல்கிற காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு எப்படி திமுக ஆதரவு தருகிறது?

ஒரு சொட்டு தண்ணீர் தர முடியாது என்று சொன்ன காங்கிரஸுடன் கூட்டு இல்லை சீட்டு இல்லை என்று ஏன் ஸ்டாலினால் சொல்ல முடியவில்லை. நாட்டில் உள்ள தேசிய மாநில கட்சிகள் அனைத்தும் ஊழல் குப்பைகள். இந்த குப்பைகளை ஒழிப்பதற்கு ஒரு தீக்குச்சி போதும்.

மைக் சின்னம்

ஒரு தீக்குச்சியால் ஊழல் குப்பையை ஒழித்து காளியம்மாளுக்கு வாக்களித்து எங்கள் கட்சியை வெற்றி பெற செய்யுங்கள். மேலும் பெரிய கட்சி, சின்ன கட்சி, என்று பார்க்காதீர்கள்.

ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்கினால் இந்த தேசம் உங்களை திரும்பிப் பார்க்கும். அரசியலில் ஒரு புரட்சி உருவாகும். வரலாற்றில் ஏற்பட்ட எல்லா மாற்றங்களும் ஒரு தனி மனிதனால் ஏற்படுத்தப்பட்டதே. எனவே இந்த தேர்தலில் எங்கள் கட்சிக்கு வாக்களியுங்கள்.

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் – சீமான்

நாங்கள் ஜெயிச்சால் உங்களது வெற்றி இந்த மக்களின் வெற்றி. மீத்தேன் பிரச்சனை முதல் மீனவர் பிரச்சினை வரை நாங்கள் முன்வந்து போராடிக் கொண்டிருக்கிறோம். பணம் இருந்தால் தான் அரசியல் மாற்றம் வரும் என்ற நிலையை மாற்றுங்கள். அடித்தட்டு மக்கள் வரை அதிகாரக் கிடைக்க நாங்கள் உறுதி செய்கிறோம்.

தமிழகத்தில் தமிழனுக்கு வேலை இல்லை. எல்லா வேலைகளிலும் வடநாட்டுக்காரன் வந்துவிட்டான். நாற்று நட, களை எடுக்க அது மட்டுமல்ல பிச்சை எடுக்க கூட வடநாட்டுக்காரன் வந்துவிட்டான். மேலும் 100 நாள் வேலை என்று சொல்கிறார்கள்.

நாம் தமிழர் கட்சி

இது ஆக்கப்பூர்வமா என்ன வேலையா? என்றால் இல்லை. மேலும் 100 நாள் வேலையில் ஒரு நாள் ஒன்றுக்கு ஒரு மரக்கன்று நட்டால் கூட இன்று நாடு முழுவதும் மரங்களாக இருப்போம். நாடு செழிப்பாக இருக்கும். இவ்வாறு சீமான் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here