கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 45 வார்டுகளிலும் அதிகரித்து வரும் தெரு நாய்களால் பொதுமக்கள் நாள்தோறும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்,
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 38 வது வார்டு வாசவி நகர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமி ஒன்று தன் வீட்டுக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய் சிறுமியை துரத்தி கடிக்க ஆரம்பித்துள்ளது அதனைத் தொடர்ந்து மேலும் அப்பகுதியில் சுற்றித்திரிந்த இரு தெரு நாய்களும் சிறுமியை சூழ்ந்து கடிக்க இதில் சிறுமி நிலைகுலைந்து கீழே விழுந்ததும் மூன்று நாய்களும் சிறுமியை சூழ்ந்து கடிக்க தொடங்கியதும்,
அப்பகுதியில் வீட்டில் இருந்த சிலர் ஓடி வந்து நாய்களிடமிருந்து சிறுமியை காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்று நாய்கள் துரத்தி கடித்ததில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த சிறுமிக்கு தலைப்பகுதியில் ஆறு தையல் போடப்பட்டு மேலும் சிறுமியை தெரு நாய்கள் ஆறு இடத்தில் கடித்திருப்பதை கண்ட மருத்துவர்கள் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும்
அதன் பிறகு சிறுமிக்கு நான்கு நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு அதன் பிறகு வீடு திரும்பி உள்ளனர், அந்த வீதியில் உள்ள ஒரு வீட்டின் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த சிறுமியை நாய்கள் சூழ்ந்து கடிக்கும் காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, சிறுமியை சூழ்ந்து நாய்கள் கடிக்கும் காட்சியை காண்பவர்களின் நெஞ்சை பதபதைக்க வைக்கிறது, மேலும் ஓசூர் மாநகராட்சி பகுதியில் அதிகரித்து வரும் தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்தி பொதுமக்களுக்கும் சிறுவர் சிறுமியர்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஓசூர் மாநகராட்சியின் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.