விதிகளை மீறி 150 ஏக்கர் பரப்பளவில் ஏரியில் மண்ணள்ளப்படுகிறது. நிலக்கரி சுரங்கம் போல் காட்சியளிக்கும் விழுப்புரம் ஜானகிபுரம் ஏரி.

0
57
ஜானகிபுரம் ஏரி.

தமிழகம் பெருமளவு விவசாயத்தை நம்பி இருக்கிற மாநிலங்களில் ஒன்று. விவசாயத்திற்கு நீரை சேமிக்க நீர்நிலைகளை பயன்படுத்தி வருகிறோம் ஆறு, ஏறி, குளம் போன்ற நீர்நிலைகளில் ஆறுகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டு வரும் நிலைதான் இருந்து வருகிறது அடுத்தபடியாக நீரை சேமிக்க நமக்கு இருக்கிற ஒரே நீர்நிலை ஏரிதான். அந்த ஏரிகளும் கூட தற்போது முறையாக தூர்வாரப்படாமல் இருந்து வருவதால் மழைக்காலங்களில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாமல் இருந்து வருகிறோம்.

அந்த ஏரிகளும் கூட தற்போது சில இடங்களில் கிராவல் மண் அள்ளுவதற்காக பயன்படுத்தப்பட்டு குண்டும் குழியுமாகவே காட்சியளிக்கிறது. அப்படித்தான் விழுப்புரம் அருகில் உள்ள ஜானகிபுரம் ஏரியின் நிலையும். தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் அதற்காக கிராவல் மண் அள்ளப்படும் பகுதியாக ஜானகி வரும் ஏரி தற்போது இருந்து வருகிறது.

சுமார் 150 ஏக்கர் நிலப்பரப்பில் ஏரியில் உள்ள வண்டல் மண்களை அப்புறப்படுத்தி விட்டு 30 அடியிலிருந்து 50 அடி ஆழம் வரை ஏரியில் கிராவல் மண் அள்ளப்பட்டு வருகிறது. ராட்சத இயந்திரங்கள் மூலம் தோண்டப்பட்டு அதிலிருந்து கிராவல் மண் அள்ளப்பட்டு வருகிறது. நகாய் நிறுவனம்தான் இப்போது அந்த பகுதியில் மண் அள்ளி வருகிறது. அந்த நிறுவனத்திடம் கேட்டால் ஒரு லட்சம் டிப்பர் லாரி மண் அள்ளுவதற்கு மாவட்ட நிர்வாகம் கனிமவளத்துறையிடம் அனுமதி பெற்றுள்ளதாக தெரிவிக்கிறார்கள். ஏரி ஆறு போன்ற பகுதிகளில் மண் அள்ளுவதற்கு என்று அரசும் நீதிமன்றமும் சில விதிகளை விதித்துள்ளது அந்த விதிகளை மீறி 20 அடியில் இருந்து 50 அடி ஆழம் வரை ராட்சத இயந்திரங்களை கொண்டு கிராவல் மண்ணள்ளப்பட்டு வருகிறது.

விவசாயிகள் விளைநிலங்களுக்கு வண்டல் மண் கேட்டு அனுமதி மனு கொடுத்தால் அவ்வளவு சீக்கிரம் அனுமதி தராத மாவட்ட நிர்வாகம் சாலை விரிவாக்கத்துக்கு என்று கண்காணிக்க கூட பெயருக்கு ஒரு அதிகாரியை கூட நியமிக்காமல் அனுமதி அளித்து இருப்பது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இது வெற்றி மாவட்ட ஆட்சியர் பழனி அவர்களை தொலைபேசியில் பலமுறை தொடர்பு கொண்டு இந்த பதிலும் இல்லை அதன் பிறகு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தொலைபேசி வாயிலாக நாம் அளித்த தகவலை தெரிந்து கொண்டு விசாரிக்கிறேன் என்று சொன்னவர் எந்த பதிலும் இதுவரை சொல்லவில்லை இப்படியே போனால் எதிர்வரும் வடகிழக்கு பருவ மழை நீரை சேமிக்க முடியாத அளவிற்கு இந்த ஏரி மாறி வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு. மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here