தாய்லாந்து என்றவுடன் நமது நினைவுக்கு வருவது இயற்கை சூழ்ந்த ரம்மியமான சுற்றுலா தளங்கள் மற்றும் உடல் சோர்வை நீக்கும் மசாஜ் தான் . இதற்காகவே தாய்லாந்து மற்றும் அதன் தலைநகரமான பாங்காக்கிற்கு ஒரு தடவையாவது சென்று வர வேண்டும் என்பது ஒட்டுமொத்த இந்திய ஆண்களின் கனவாக இருக்கிறது .
ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்களின் கனவு பல்வேறு காரணங்களால் இன்னமும் நிறைவேறாமலே உள்ளது .
இந்த கனவினை நினைவாகும் வகையில் தாய்லாந்து அரசு ஒரு புதிய உத்தரவினை பிறப்பித்துள்ளது அது என்னவென்றால் , இந்திய மற்றும் தைவான் சுற்றுலாப் பயணிகளுக்கு தாய்லாந்து செல்ல விசா கட்டாயமில்லை என்று அந்நாட்டு அரசு ஒரு புதிய ஆணையை வெளியிட்டுள்ளது .
சுற்றுலா சீசன் நெருங்கி வருவதால், அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முயற்சியில், தாய்லாந்து சுற்றுலாத்துறை அமைச்சகம் , இந்தியா மற்றும் தைவானில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கான விசா தேவைகளை தற்காலிகமாக நீக்குவதாக அறிவித்துள்ளது, இந்த தளர்வு அடுத்த மாதம் தொடங்கி மே 2024 வரை தொடரும்.
முன்னதாக செப்டம்பர் மாதத்தில் தாய்லாந்து அரசு சீன நாட்டிற்கு இது போன்ற விசா தளர்வு செய்த நிலையில் தற்போது இந்தியா மற்றும் தைவான் நாட்டிற்கும் விசா தளர்வு முறையை அமல் படுத்தியுள்ளது .
இந்தியா மற்றும் தைவானில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் 30 நாட்களுக்கு தாய்லாந்திற்குள் விசா இல்லாமல் தங்கலாம் என்று செய்தித் தொடர்பாளர் சாய் வச்சரோன்கே தெரிவித்துள்ளார் .
சமீபத்திய தாய்லாந்து அரசாங்கத் தரவுகளின்படி, ஜனவரி மற்றும் அக்டோபர் 29 க்கு இடையில் சுற்றுலா தலமான தாய்லாந்து நாடு 22 மில்லியன் பார்வையாளர்களை வரவேற்றது, இதன் விளைவாக 927.5 பில்லியன் பாட் ($25.67 பில்லியனுக்கு சமமாக ) வருவாய் ஈட்டியது .
நவம்பர் மாதம் 10 ம் தேதி முதல் மே மாதம் 10 ம்தேதி வரை இந்தியா மற்றும் தைவானில் இருந்து வரும் பயணிகள் விசா இல்லாமல் தாய்லாந்திற்கு செல்லலாம் என்று பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், கூட்டப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
தாய்லாந்தின் சுற்றுலா ஆணையத்தின் கூற்றுப்படி, இந்த ஆண்டு மலேசியாவில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தந்துள்ளனர், 3 மில்லியனுக்கும் அதிகமானோர் வருகை தந்துள்ளனர்.
மலேசியாவின் எண்ணிக்கையை கொரோனா தொற்றுநோய் பரவலுக்கு முன்னர் தாய்லாந்திற்கு 2.65 மில்லியன் சீன சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர் .
இதனை தொடர்ந்து இந்த மாத தொடக்கத்தில், தாய்லாந்தில் உள்ள சுற்றுலா நிறுவனம் 2023 ஆம் ஆண்டில் சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4 முதல் 4.4 மில்லியனை எட்டும் என்று எதிர் பார்த்தது .
இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கான இலவச விசாக்களை மார்ச் 31 ஆம் தேதி வரை வழங்கும் வகையில் இலங்கை அமைச்சரவை அக்டோபர் 24 ஆம் தேதி ஒரு புதிய உத்தரவை பிறப்பித்தது .
இந்த நாடுகளில் இருந்து வரும் பார்வையாளர்கள் இப்போது இலங்கைக்கான விசாக்களை எந்தவித கட்டணமும் இன்றி பெற முடியும், என்று இலங்கை அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது .