அரசு வேலை வாங்கி தருவதாக கூறி போலி ஆவணம் கொடுத்து பல லட்சம் மோசடி – 2 பேர் கைது..!

2 Min Read

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் அமைச்சர் அரசு உயர் அதிகாரிகள் பெயரைச் சொல்லி பல பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 32 லட்சம் மோசடி செய்து, போலி பணி ஆணை வழங்கி ஏமாற்றி 2 பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

- Advertisement -
Ad imageAd image

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள சின்ன பொன்னம்பூண்டி என்ற பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு வயது 31. இவர் கவரை கிராமத்தில் உள்ள அம்மச்சார் அம்மன் கோவில் பூசாரியாக உள்ளார். இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு திருப்பத்தூரை சேர்ந்த வினோத்குமார் வயது 43 என்பவர், அம்மசார் அம்மன் கோவிலுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது அன்னதானம் செய்வதிலும், சிறப்பு பூஜை செய்வதிலும் பூசாரி திருநாவுக்கரசுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வினோத்குமார் தனது அமைச்சர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் தெரியும் என்று பழக்கம் என்பதால் எளிதாக அரசு வேலை வாங்கித் தருவதாக தெரிவித்துள்ளார்.

குற்றப்பிரிவு போலீசார்

இதை நம்பிய திருநாவுக்கரசு வளத்தியை சேர்ந்த தினேஷ்குமார் என்பவருக்கு கிராம நிர்வாக அலுவலர் வேலைக்கு ரூபாய் 10 லட்சம், திருவாரூரை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவருக்கு அலுவலக உதவியாளர் பணிக்கு ரூபாய் 3 லட்சம், கணக்கன் குப்பத்தை சேர்ந்த அமுதா, சித்ரா ஆகியோருக்கு ஆசிரியர் வேலைக்காக ரூபாய் 4 லட்சம் அல்லது ரூபாய் 7 லட்சம் என பல பேரிடம் அரசு வேலைக்காக ரூபாய் 32 லட்சம் வசூலித்துள்ளார். இதனை வினோத்குமார் காரில் வந்து அம்மச்சாரம்மன் கோவிலில் பெற்றுச் சென்றுள்ளார். தொடர்ந்து சில நாட்களில் ஒரு ஆணையை வழங்கி வேலையில் சேருமாறு தெரிவித்துள்ளார். அந்த ஆணை எடுத்து சென்ற நபர்கள் போலியானது என தெரிய வந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். திருநாவுக்கரசிடம் கேட்ட போது அவர் பதில் கூறவில்லை.

எஸ்.பி சஷாங் சாய்

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி.யிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க குற்றப்பிரிவு போலீசாருக்கு எஸ்.பி சஷாங் சாய் உத்தரவிட்டார். அதன்படி திருநாவுக்கரசு வினோத்குமார் ஆகிய இருவர் மீதும் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, நேற்று கைது செய்தனர். அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மோசடி சம்பவங்கள் போலி பணி நியமன ஆணைகள் அனைத்தும் அதிமுக ஆட்சி நடைபெற்றுள்ளது என குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a review