நீலகிரி மாவட்டம் முதுமலை அருகே உள்ள மாயார் கேம்ப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் எப்படி நடந்தது அதை பற்றி காணலாம்.
கோவை புறநகர் பகுதியையொட்டி மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான யானைகள், காட்டெருமைகள், புள்ளி மான்கள், காட்டு பன்றிகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் வனவிலங்குகள் உணவு, குடிநீரை தேடி வனத்தையொட்டி உள்ள கிராம பகுதிகளுக்குள் படையெடுத்து வருகின்றன.
வனத்துறையினரும் வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் இருக்க வனப்பகுதியில் குடிநீர் தொட்டி அமைத்து தண்ணீர் நிரப்பி வருகின்றனர். இருப்பினும் யானைகள் உணவு, குடிநீரை தேடி வனத்தையொட்டி உள்ள கிராம பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் யானைகள் மீண்டும் இரவு வனத்திலிருந்து வெளியே வந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதி அடிவாரத்தில் இருந்து வெளி வந்த யானைகள் அருகில் உள்ள தோட்டங்களுக்குள் உலா வந்து கிராமப் பகுதிகளுக்கும் சென்றுள்ளது.
குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து கடந்த இரண்டு வாரங்களாக சுற்றி வரும் காட்டு யானைக் கூட்டத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். அதனை தொடர்ந்து விவசாய நிலங்களை அந்த யானைகள் சேதப்படுத்தி வருகின்றன.

இதனால், ஊருக்குள் புகும் காட்டு யானைகளால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். கோவை மாவட்டம், தடாகம், மருதமலை, முதுமலை, மாங்கரை, பேரூர், தொண்டாமுத்தூர், குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவு காணப்படுகிறது.
மேலும், வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள், குன்னூர் பகுதிகளில் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இதை சம்பவம் இங்கு அரங்கேறியது.

நீலகிரி மாவட்டம், அடுத்த முதுமலை அருகே உள்ள மாயார் கேம்ப் பகுதியில் முதுமலை புலிகள் காப்பகம் அருகே உள்ளது. அதனை சுற்றி மாயார் கேம்ப் பகுதி உள்ளது. அதேபகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பா இவரது மகன் நாகராஜ் வயது 55.
வழக்கம்போல இரவு நேரங்களில் காட்டு பன்றிகள் மட்டுமின்றி விவசாய நிலங்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை விரட்டுவதற்காக தனது தோட்டத்தில் காவல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
தனது தோட்டத்திலிருந்து வந்த காட்ட யானை எதிர்பாராத விதமாக நாகராஜை தாக்கியது. அப்போது நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் நாகராஜ் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காட்டு யானை தாக்குதல் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.