மும்பை சர்வதேச திரைப்பட விழாவின் ஆவணப்பட ஃபிலிம் பஜாருக்கு படங்களைச் சமர்ப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு

0
19

18-வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவுடன் ஏற்பாடு செய்யப்படும் முதல் ஆவணப்பட ஃபிலிம் பஜாருக்கான திட்டங்களின் சமர்ப்பிப்பு தேதிகளை நீட்டிப்பதாக தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. முன்னதாக 2024, மார்ச் 31-ந் தேதியாக இருந்த காலக்கெடு, நாட்டின் புவியியல் ரீதியாக தொலைதூரப் பகுதிகளில் பணிபுரியும் திரைப்படத் தயாரிப்பாளர்களால் திட்டங்களை எளிதாக சமர்ப்பிப்பதற்காக ஏப்ரல் 10-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜூன் மாதம் 16 முதல் 18 வரை மும்பையில் நடைபெறும். திரைப்படத் தயாரிப்பு, இயக்கம் மற்றும் விநியோகம் ஆகியவற்றில் திறமைகளை வெளிப்படுத்தும் ஆவணப்படம், குறும்படங்கள் மற்றும் அனிமேஷன் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்கும் ஆதரிப்பதற்கும் வடிவமைக்கப்பட்ட முதலாவது விரிவான தளமாக இந்த ஃபிலிம் பஜார் இருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

டாக் பிலிம் பஜாரின் முக்கிய பிரிவுகளில் டாக் கோ-புரொடக்ஷன் மார்க்கெட், டாக் வியூவிங் ரூம், டாக் வொர்க்-இன்-புரோகிரஸ் லேப் ஆகியவை அடங்கும். இதற்காக திரைப்பட இயக்குநர்கள் தங்கள் படங்களை சமர்ப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். டாக் கோ-புரொடக்ஷன் மார்க்கெட் (ஆவணப்பட இணை தயாரிப்பு சந்தை) என்பது உலகளாவிய திரைப்பட சகோதரத்துவத்திலிருந்து கலை மற்றும் நிதி ஆதரவைப் பெறுவதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு தளமாகும். இது உலகளவில் திரைப்பட இயக்குநர்கள் மற்றும் சாத்தியமான தயாரிப்பாளர்கள் அல்லது இணை தயாரிப்பாளர்களுக்கு இடையிலான கூட்டாண்மைகளை எளிதாக்கும் ஒரு பிரிவாகும். இது ஒத்துழைப்பு, இணை தயாரிப்புகள் மற்றும் ஆவணப்படம், அனிமேஷன் திரைப்பட திட்டங்களுக்கான நிதி வாய்ப்புகளுக்கான தளத்தை வழங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here