தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பாக தமிழக அரசை கண்டித்து மாநிலம் தழுவிய தொடர் காத்திருப்பு போராட்டம் நடைப்பெற்றது.
இந்த போராட்டமானது கோவை டாடாபாதில் உள்ள தலைமை பொறியாளர் அலுவலகம் வளாகற்றில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் தங்களது 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

உடனடியாக தமிழக அரசு மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மின்வாரிய ஊழியர்:-
33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆரம்ப நிலை காலி பணியிடங்களில் நிரப்ப வேண்டும், வேலை பளு ஒப்பந்தத்திற்கு எதிராக வெளியிட்ட உத்தரவுகளை திரும்ப பெற வேண்டும். மின்வாரியத்தை தனியார் மையப்படுத்தும் நடவடிக்கை கைவிட வேண்டும்,

அரசு ஊழியர்கள் பெறுகின்ற குடும்பநல நிதி 5 லட்ச ரூபாயை மின்வாரியத்திலும் அமல்படுத்த வேண்டும். மொபைல் ஆப் மூலம் கணக்கீடு பணி செய்திட மொபைல் போன் அல்லது TAB வழங்க வேண்டும், பல வருடங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட கணினி சார்ந்த மின் பொருட்களை புதிதாக மாற்றி தர வேண்டும்.

கணக்கீட்டாளர்களுக்கு இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைத்துள்ள விருப்ப இடமாறுதல் உத்தரவை வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் பகுதி நேரம் ஊழியர்களை அடையாளம் கண்டு பணியின் நிரந்தரம் செய்ய வேண்டும் என 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.