பார்க்கிங் பிரச்சனையால் ஈகோ மோதல் – கொலை மிரட்டல் விடுத்த நடிகை சரண்யா..!

2 Min Read
நடிகை சரண்யா

தமிழ் சினிமாவில் 90-ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் சரண்யா பொன்வண்ணன். இவர் தற்போது அம்மா என்ற பல வேடங்களில் நடித்து கொண்டிருக்கிறார். இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

- Advertisement -
Ad imageAd image

இந்த நிலையில் நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘நாயகன்’ படத்தில் கமலின் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் சரண்யா பொன்வண்ணன்.

நடிகை சரண்யா

இதனை அடுத்து பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர், தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கி வருகிறார். குறிப்பாக முன்னணி நடிகர்கள் பலருக்கு அம்மா வேடங்களில் நடித்து கொண்டிருக்கிறார் சரண்யா.

இந்த நிலையில் சினிமாவில் பிசியாக நடித்து கொண்டிருக்கும் இவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பத்மாவதி நகரில் வசித்து வருகிறார் சரண்யா. இவரின் பக்கத்து வீட்டுக்காரரான ஸ்ரீதேவி என்பவர் தான் தற்போது போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

நடிகை சரண்யா

அதன்படி நேற்றிரவு ஸ்ரீதேவி வெளியில் செல்வதற்காக தனது காரை எடுக்க முயன்றுள்ளார். அப்போது அருகில் நிறுத்தப்பட்டிருந்த சரண்யாவின் காரின் மீது இடிப்பது போல் சென்றுள்ளது. இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது.

ஒருக்கட்டத்தில் இந்த விவாதம் முற்றியுள்ளது. இதனை அடுத்து ஸ்ரீதேவியின் வீட்டுக்குள்ளயே சென்று அவரை சரண்யாவின் குடும்பத்தினர் தகாத வார்த்தையால் திட்டி, கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

நடிகை சரண்யா

இவ்வாறு தனது புகார் மனுவில் குறிப்பிட்டு, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் ஸ்ரீதேவி. தனது குடும்பத்தினரை தாகத வார்த்தையில் மிரட்டி, கொலை மிரட்டல் விடுத்த நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தன்னுடைய மனுவில் குறிப்பிட்டுள்ளார் ஸ்ரீதேவி.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி பதிவுகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விரும்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

நடிகை சரண்யா

அண்மையில் ஹரிஸ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர் நடிப்பில் வெளியான படம், பார்க்கிங் பிரச்சனையால் மனிதர்களுக்கு இடையே நிகழும் ஈகோ மோதல் பற்றி பேசியிருந்தது.

இந்த படத்தில் வருவதை போன்றே பார்க்கிங் பிரச்சனையால் பக்கத்து வீட்டுக்காரருடன் சரண்யா பொன்வண்ணன் மோதலில் ஈடுபட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a review