இன்றைய ராசிபலன் ஏப்ரல் 1, 2024, சோபகிருது வருடம் பங்குனி 19, திங்கட் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷ ராசியில் உள்ள பரணி, கிருத்திகை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது.

மேஷம்:

மேஷம்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். இன்று உங்களின் பணிகளை முடிப்பதில் மும்முரமாக இருப்பீர்கள். பணியிடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மூலங்களில் இருந்து உங்களுக்கு ஜனநாயகம் கிடைக்கும். என்று உங்களின் தேவையற்ற கவளைகள், உங்கள் வேலையை திசைதிருக்கலாம்.

ரிஷபம்:

ரிஷபம்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று நிலுவையில் உள்ள பணம் திரும்ப பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களின் உள்ளுணர்வுகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். காதல் வாழ்க்கையில் இனிமையான சூழல் நிலவும். புதிய வேலை தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமான நாள். பணியிடத்தில் மூத்த உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.

மிதுனம்:

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு கவலை தரக்கூடிய நாளாக இருக்கும். என்று குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை பிரச்சனை கவலை தருவதாக இருக்கும். நண்பர்கள் மூலம் நல்ல ஆதரவை பெறுவீர்கள். சுப நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். பணியிடத்தில் புதிய திட்டங்களை தொடங்கலாம்.

கடகம்:

கடகம்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு நல்ல பலன் தரக்கூடிய நாளாக இருக்கும். சொத்து தொடர்பான விஷயங்களில் சாதக சூழல் நிலவும். குடும்ப வாழ்க்கையில் பிறருடன் மனக்கசப்பு ஏற்படும். பணியிடத்தில் உங்கள் வேலையை கண்ணும் கருத்துமாக செய்து முடிக்க முயற்சி செய்ய வேண்டும்.

சிம்மம்:

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய நாள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுக்கான சாதகமான சூழல் நிலவும். வெளியூர், வெளிநாடு தொடர்பான ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்யக்கூடிய அவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

கன்னி:

கன்னி

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சுமாரான பலன் தரக்கூடிய நாள். உங்களின் சில தேவையற்ற செலவுகள் பிரச்சனையை தரக் கூடியதாக இருக்கும். பணியிடத்தில் எதிரிகளின் தொல்லையை, புத்திசாலித்தனமாக சமாளிப்பீர்கள். பிள்ளைகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற உள்ளீர்கள். முதலீடு தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை.

துலாம்:

துலாம்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். இல்லற வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்களின் ஆலோசனையால் மேலதிகாரிகளை மகிழ்விப்பீர்கள். ஆக்கப்பூர்வமான வேலைகளில் ஈடுபட்டு நல்ல பெயர் பெறுவீர்கள். இன்று உணவு பழக்க வழக்கத்தில் கவனம் தேவை.

விருச்சிகம்:

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நிலுவையில் உள்ள பணிகளை குறித்து நேரத்தில் செய்து முடிக்க முடியும். உங்களின் செயல்பாட்டில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். சோம்பேறித்தனத்தை விடுத்து, சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டிய நாள். இன்று நீங்கள் எதிர்பார்த்த ஆதரவு நண்பர்கள், மனைவியிடம் இருந்து பெறுவீர்கள்.

தனுசு:

தனுசு

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும்.. உங்களின் சில செலவுகள் அதிகரிக்கும். இருப்பினும் புதிய வருமான வாய்ப்புகள் கவலையை தீர்க்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் தொடர்பாக ஆலோசிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மேம்படும். பணியிடத்தில் தவறுகள் நிகழாமல் கவனமாக செயல்படவும்.

மகரம்:

மகரம்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். சமூகப் பணிகளுக்காக ஆர்வத்துடன் பங்கேற்பியர்கள் உங்கள் செயல்பாடுகளுக்கு நல்ல பெயர் கிடைக்கக்கூடிய நாள். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரம் தேடி வரும்.

மீனம்:

மீனம்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு கலவையான பலன் தரக்கூடிய நாளாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் நல்ல ஆதரவையும், சிறப்பாக வேலைகளையும் முடிக்க முடியும். நீண்ட நாட்களாக கவலைப்பட்ட விஷயங்கள் நீங்கும். வேலை தொடர்பாக நண்பர்களின் உதவி கிடைக்கும். பயணங்கள் இனிமையானதாக அமையும். பிள்ளைகளிடமிருந்து சில நல்ல செய்திகள் கேட்பிர்கள்.

கும்பம்:

கும்பம்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாளாக இருக்கும். நண்பர்களிடமிருந்து நல்ல செய்திகள் கேட்பீர்கள். இன்று அசையும், அசையா சொத்து வாங்குவது குறித்து ஆவணங்களை சரியாக பரிசோதிக்கவும்.முதலீடு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை சரியான நேரத்தில் நிறைவேற்றுவீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here