ஏப்ரல் ஒன்று இந்த நாளை வாக்காளர் நாளாக மாற்றி விடாதீர்கள்!- டாக்டர் ராமதாஸ்

0
9
ராமதாஸ்

இன்று ஏப்ரல் 1ஆம் தேதி முட்டாள்கள் தினத்தினை முன்னிட்டு இந்த நாளை வாக்காளர் நாளாக மாற்றி விடாதீர்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இத்தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தனது எக்ஸ் வலைதள பக்கத்தில்,”நாள்காட்டியில் இன்றைய நாள் ஏப்ரல் ஒன்று. இந்த நாள் இப்போது அழைக்கப்படும் நாளாகவே நீடிக்கட்டும். இந்த நாளை நாம் வாக்காளர்கள் நாளாக மாற்றி விடக் கூடாது.

ராமதாஸ்

அவ்வாறு மாற்றி விடாமல் இருப்பதற்கு வரும் 19-ஆம் நாள் தமிழ்நாடு மற்றும் புதுவையில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கும், அதிமுக தலைமையிலான கூட்டணிக்கும் நாம் வாக்களிக்கக் கூடாது.

வாக்களிப்பீர் பா.ம.க. உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுக்கு! வாக்களிப்பீர் மாம்பழம், தாமரை, சைக்கிள், குக்கர் , பலா ஆகிய சின்னங்களுக்கு!!” என்று பதிவிட்டு தனது கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here