தி.மு.க.வில் யாரும் சாமி கும்பிடக்கூடாது, கோவில்களுக்கும் செல்லக் கூடாது – நடிகை குஷ்பூ.!

0
27
பிரதமர் மோடி

சென்னை: பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு கூறியதாவது:-‌‌கர்நாடகா மாநிலம் உடுப்பியில் கல்லூரி மாணவிகள் கழிவறையில் கேமிரா பொருத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக 3 மாணவிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான இந்த கொடுமை பற்றி தேசிய மகளிர் ஆணையம் விசாரித்து வருகிறது. நானும் நேரில் சென்று விசாரித்து வந்தேன். தொடர்ந்து விசாரணை நடப்பதால் இப்போது எதுவும் சொல்ல முடியாது.

பிரதமர் மோடி மக்கள் பிரதமராக உயர்ந்து நிற்கிறார். அவர் இந்தியாவில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் மக்கள் வெற்றி பெற செய்வார்கள். ஆனால் தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. இப்போதே அவர் ராமநாதபுரத்தில் போட்டியிடுவாரா? மாட்டாரா? என்று பேச வேண்டியது இல்லை. தேர்தல் நேரத்தில் எங்கு போட்டியிட வேண்டும் என்பதை அவரும், கட்சியும் முடிவு செய்யும். ஒருவேளை ராமநாதபுரத்திலேயே போட்டியிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

குஷ்பூ மோடி

‌                                                                    

அவரை எதிர்த்து போட்டியிடும் துணிச்சல் தி.மு.க.வுக்கு உண்டா? தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நடத்தும் யாத்திரை மக்கள் மத்தியில் எழுச்சியை உருவாக்கி உள்ளது.‌‌நிச்சயம் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த பயத்தில்தான் பாவ யாத்திரை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து வருகிறார். ஆனால், தமிழகத்தை வஞ்சித்து பாவம் செய்து வருவது தி.மு.க. செய்த பாவங்களுக்கு பிராயசித்தம் தேடத்தான் கோவில் கோவிலாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே பாவம் செய்யவில்லை என்றால் தி.மு.க.வில் யாரும் சாமி கும்பிடக்கூடாது. கோவில்களுக்கும் செல்லக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here