பிடிப்பட்டது மக்னா யானை.! கபில்தேவ் கும்கி யானையும் இதில் பங்கு.!

0
75
கபில்தேவ் கும்கி யானை

பொள்ளாச்சி அடுத்த சரளப்பதியில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்த மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர் வனத்துறை அதிகாரிகள்.

தொடர்ந்து தமிழக மற்றும் கேரள வனப்பகுதிகளில் யானைகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை தொடர்ந்து பொது மக்கள் பல முறை யானையை பிடிக்க மாவட்ட நிர்வாகத்தினை வலியுறுத்தியும் கோரிக்கை வைத்தும் வந்தனர். தற்போது அந்த பகுதியில் சுற்றித்திரிந்த யானை பிடிக்கப்பட்டது.

ஆனைமலை புலிகள் காப்பகதிற்குட்பட்ட பகுதியில் தர்மபுரியில் இருந்து பிடிக்கப்பட்ட மக்னா யானை ஒன்று வால்பாறை அருகே உள்ள மந்திரி மட்டம் என்னும் பகுதியில் விடப்பட்டது. இந்த யானை கடந்த சில மாதங்களாக ஆனைமலை அடுத்த சரளபதி அருகே முகாமிட்டிருந்ததும் மற்றும் அங்குள்ள பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததும் குறிப்பிட வேண்டிய தகவல்.

நலிவடைந்துள்ள தாம் வாழ்வாதாரமாக விவசாயத்தையே செய்துவருவதாகவும் இவ்வாறு காட்டுயானைகள் அழிவை ஏற்படுத்துவதனால் மிகவும் பின்னடைவுகளை வாழ்வாதாரத்தில் ஏற்படுத்தும் நிலை தோன்றியுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் விளைநிலங்களுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது. இந்நிலையில் அங்குள்ள பொதுமக்கள் யானையை பிடித்து கும்கியாக மாற்ற வேண்டும் என தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு பல கோரிக்கைகள் வைத்து வந்தனர்.

இதனை அடுத்து தனி குழு அமைக்கப்பட்டு மக்னா யானையை பிடிக்கும் பணி தீவிரப் படுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை 4″மணியளவில் மருத்துவர்கள் மூலம் மயக்க ஊசி செலுத்தி மக்னா யானையை கபில் தேவ் கும்கி யானை உதவியுடன் வனத்துறையினர் தற்பொழுது பிடித்து யானை கொண்டு செல்லும் பிரத்தியேக வண்டியில் ஏற்றப்பட்டு வருகிறது. இந்த யானையை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வால்பாறை அருகே உள்ள சின்ன கல்லார்  பகுதியில் விடப்படுவதாக தற்பொழுது முதல் கட்டமாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, யானை வேலிகளை அமைத்து தமது விவசாய நிலங்களை பாதுகாப்பதற்கு உரிய அதிகாரிகள் ஆவணம் செய்யவேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here