திமுக ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் குறித்து தி.மு.க தலைமை பெருமிதம்..!

5 Min Read

தமிழகத்தில் 9.61 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 30 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு, இதுவரை தொழில் வளர்ச்சி வரலாற்றில் இல்லாத ஒரு மாபெரும் புரட்சி திமுக ஆட்சியில் நிகழ்த்தப்பட்டுள்ளது. இது குறித்து திமுக வெளியிட்ட அறிக்கை:

- Advertisement -
Ad imageAd image

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிகார பலத்துடன் பாஜக, பணபலத்துடன் அதிமுக வந்த போதிலும், அஞ்சாத சிங்கமாய்ச் சீறி எழுந்து, மக்களை சந்தித்து நமக்கு நாமே, ஒன்றிணைவோம் வா, தமிழகம் மீட்போம், மிஷண் 200, விடியலை நோக்கி ஸ்டாலின் குரல், அதிமுகவை நிராகரிக்கிறோம்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டு மக்கள் மு.க.ஸ்டாலின் தலைமையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டார்கள். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு 165 இடங்களை தந்து ஆட்சியை மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்தார்கள்.

கடந்த 2021 மே 7 ஆம் தேதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் எனக்கூறி நிமிர்ந்த தலையுடன் உறுதிமொழிகள் ஏற்றுத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூன்றாம் முதல்வராக அண்ணா, கலைஞருக்குப் பின் முதல்முறையாக தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்றார்.

திமுக

முதல்வராக பொறுப்பேற்ற பின், நேரே கோட்டைக்குச் சென்று முதல்வர் நாற்காலியில் அமர்ந்தவுடன் தமிழ்நாட்டு மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தொடங்கி, விடியல் பயணத்திட்டம்,

கொரோனா நிவாரண உதவித்தொகை ரூ.4,000 வழங்கும் திட்டம், முதல்வரின் முகவரித்துறை உருவாக்கும் திட்டம், பால்விலை லிட்டருக்கு 3 குறைப்புத்திட்டம், பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 குறைப்புத்திட்டம் ஆகிய 5 கோப்புகளில் முதன்முதல் ஆணைகள் பிறப்பித்தது.

முதலமைச்சர் ஸ்டாலின்

பிறகு அதை நிறைவேற்றி, சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம்” என்பதுடன், “சொல்லாததையும் செய்வோம்” என கூறி மக்களுக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் வழங்கினார்.

அதை தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களுக்காக அவர் ஆற்றிய சாதனைகள் எல்லாம் தமிழ்நாட்டை இந்தியாவின் முதல் மாநிலமாக உயர்த்தியுள்ளது. அதில் தமிழ்நாடு மாநிலம் தான் அதிக அளவில் 50 சிறப்பு பொருளாதார மண்டலங்களை ஏற்படுத்தி இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

இதில் முதலிடம் பெற்றுள்ள தமிழ்நாட்டின் ஏற்றுமதி மதிப்பு 7.990 பில்லியன் அமெரிக்க டாலர். அதில் 5.30 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்து தமிழ்நாடு இந்தியாவில் முதல் மாநிலம் என்று அறிவித்து பாராட்டப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, கோவை, தூத்துக்குடி ஆகிய இடங்களிலும், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் வாயிலாக மொத்தம் 9.61 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு ஏறத்தாழ 30 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குப்பட்டது.

தமிழ்நாடு அரசு

அந்த ஒப்பந்தங்கள் நடந்து இதுவரை தொழில் வளர்ச்சி வரலாற்றில் இல்லாத ஒரு மாபெரும் புரட்சி நிகழ்த்தப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பின், 45 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 27 தொழிற்சாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலமாக 74 ஆயிரத்து 757 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

இவைகள் அல்லாமல், கடந்த மூன்றாண்டுகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நிறைவேற்றியுள்ள திட்டங்கள் படைத்துள்ள சாதனைகள் எண்ணிலடங்காதவை. அவற்றுள் முக்கியமானவை:

* கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் 1 கோடியே 15 லட்சம் மகளிர் மாதந்தோறும் ரூ.1,000/- பெறுகின்றனர்.

* முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் 31,000 அரசு பள்ளிகளில் 17 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

* புதுமை பெண் திட்டத்தில் 2,72,216 கல்லூரி மாணவிகள் மாதந்தோறும் 1000 ரூபாய் பெற்று வருகின்றனர்.

* விடியல் பயணம் திட்டத்தில் மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் 445 கோடி முறை பயணம் செய்து மாதந்தோறும் ரூ.888 சேமிக்கின்றனர்.

* மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 1 கோடியே 70 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

* இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தில் 2 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

* மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 70 ஆயிரம் கோடி வங்கிக்கடன் வழங்கப்பட்டு, 12 லட்சம் குழுக்கள் பயன்.

* விவசாயிகளுக்கு 2 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டு, கூடுதலாக 2,99,384 ஏக்கரில் பயிர் சாகுபடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

* ரூ.4,818 கோடி கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு 13 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

* பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன் காக்க 62,229 பயனாளிகளுக்கு ரூ.406.22 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

* 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 28,601 அரசு பள்ளி மாணவ, மாணவியர் தொழில் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயனடைந்துள்ளனர்.

* கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 150 யூனிட் என்பது 300 யூனிட் எனவும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் என்பது 1000 யூனிட் எனவும் உயர்த்தி வழங்கப்பட்டு 2,38,163 நெசவாளர் குடும்பங்கள் பயன் பெற்றுள்ளன.

திமுக

* நிதி ஆயோக் நிறுவனத்தின் நிலை ஆய்வு அறிக்கைகள் 80 முதல் 100 விழுக்காடு அளவுக்கு ஏற்றுமதி செய்து தமிழ்நாடே முதலிடம் பெற்றுள்ளது என்று கூறிப் பாராட்டியது.

* கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரம் மற்றும் தேசிய ஏழ்மைக் குறியீடுகள் குறித்த 2023 ஆம் ஆண்டுக்கான அறிக்கை. கர்ப்பிணி பெண்கள் சுகாதாரக் குறியீடுகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்று கூறியது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்த காலை உணவுத்திட்டம் இந்தியாவை கடந்து வெளிநாடுகளிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக கனடா நாட்டில் அதன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் 2.4.2024 அன்று “கனடா நாட்டில் பள்ளி குழந்தைகளுக்கு தேசிய உணவு திட்டத்தினை அறிமுகம் செய்து வைக்கப்போகிறோம் என பதிவிட்டுள்ளார்.

இதேபோல இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் மற்ற மாநில அரசுகளையும் கவர்ந்துள்ளது. குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் தமிழ்நாட்டை பின்பற்றி இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Share This Article
Leave a review