திமுக வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரம்..!

2 Min Read
திமுக

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. அப்போது தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த புதன்கிழமை தொடங்கியது.

- Advertisement -
Ad imageAd image

அப்போது வேட்புமனு தாக்கல் செய்ய 27 ஆம் தேதி கடைசி நாள். திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

திமுக வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரம்

அதில் கூட்டணி கட்சிகளுக்கு தமிழகத்தில் 18 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 19 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பின்பு மீதியுள்ள 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

அதில் மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறன், தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன். வட சென்னையில் கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

திமுக வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரம்

பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டவுடன் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வேட்பாளர்கள் அனைவரும் வாழ்த்து பெற்றனர். அப்போது வாழ்த்து பெற்ற கையோடு வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் வீடு, வீடாகசென்று மக்களிடம் அவர்கள் வாக்குகளை கேட்டு வருகின்றனர். இதேபோல முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முதல் தனது பிரசாரத்தை தொடங்கி உள்ளார். திருச்சியில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசினார்.

திமுக வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரம்

மேலும் திமுக இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். கடந்த முறை உதயநிதி ஸ்டாலின் ஒற்றை செங்கலை வைத்து பிரசாரத்தில் ஈடுபட்டது மக்களை வெகுவாக கவர்ந்தது என குறிப்பிடத்தக்கது.

இதேபோல, மநீம தலைவர் கமல்ஹாசன் திமுக மற்றும் கூட் டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

இதேபோல, திமுக முன்னணியினர், கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பிரசாரத்தில் இறங்க உள்ளனர். இதனால், தேர்தல் களம் தமிழகம் முழுவதும் விறுவிறுப்படைய தொடங்கி உள்ளது.

Share This Article
Leave a review