திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் நிலையில், 10-க்கும் மேற்பட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
எதிர்வரும் மக்களவை தேர்தலில், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான “இந்தியா” கூட்டணியில் தொகுதி பங்கீடுகள் இறுதி செய்யப்பட்டு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக, 21 தொகுதிகளில் போட்டியிடும் திமுகவின் வேட்பாளர்கள் பட்டியலை, அந்த கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு வெளியிடுகிறார்.
அதில், மூத்த நிர்வாகிகள் சிலருக்கு மீண்டும் போட்டியிடவும், 10-க்கும் மேற்பட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கவும் திமுக திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, வட சென்னையில் கலாநிதி வீராசாமியும், மத்திய சென்னையில் தயாநிதி மாறனும், தென் தென்னையில் தமிழச்சி தங்கபாண்டியனும், மீண்டும் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்ரீபெரும்புதூரில் டி.ஆர்பாலுவுக்கும், நீலகிரியில் ஆ.ராசாவுக்கும், தூத்துக்குடியில் கனிமொழிக்கும் மீண்டும் வாய்ப்பு தரப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. அதேபோன்று, அரக்கோணத்தில் ஜெகத்ரட்சகனும் வேலூரில் கதிர் ஆனந்தும் களம் காண இருப்பதாக தெரிகிறது.

தருமபுரி, பெரம்பலூர், ஈரோடு, பொள்ளாச்சி, தென்காசி, ஆரணி, கள்ளக்குறிச்சி, தேனி, சேலம், தஞ்சாவூர், கோவை உள்ளிட்ட தொகுதிகளில் புதுமுகங்கள் களம் இறக்கப்படலாம் என கருதப்படுகிறது. அப்போது காலை 10 மணிக்கு வேட்பாளர் பட்டியலுடன் திமுகவின் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட உள்ளது.
திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களின் தேவைகளை கேட்டறிந்து அறிக்கையை தயாரித்துள்ளனர். அதில், பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 21 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலை தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிடுகிறார்.
இந்த தேர்தல் அறிக்கையும் தயாராக உள்ளது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கும், வேட்பாளர் பட்டியலை 10 மணிக்கும் சென்னை அண்ணா அறிவாலயத்தில்