Dharmapuri : இடி, மின்னல் காற்றுடன் கூடிய மழை – அறுவடைக்கு தயராக இருந்த வாழை முறிந்து விழுந்ததால் விவசாயிகள் வேதனை..!

1 Min Read

வாட்டி வதைத்து வரும் கோடை வெய்யிலுக்கிடையே நேற்று திடிரென தருமபுரி சுற்றுப்பகுதிகளில் இடி, மி்ன்னல் காற்றுடன் கூடிய மழை பெய்ததில் இண்டூர் அருகே உள்ள மூக்கனஅள்ளி சுற்றுப்பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டு அறுவடைக்கு தயராக இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என கவலை தெரிவிக்கின்றனர் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள்.

- Advertisement -
Ad imageAd image
Dharmapuri : இடி, மின்னல் காற்றுடன் கூடிய மழை

கடன் பெற்று குழந்தைகளை வளர்ப்பதை போல ஒரு வருட காலமாய் கடும் வறட்சியிலும் தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி, தங்களது வாழ்வாதாரமாக கருதி காப்பாற்றி வைத்திருந்த வாழை மரங்கள்,

அறுவடைக்கு தயராக இருந்த வாழை முறிந்து விழுந்ததால் விவசாயிகள் வேதனை

நேற்று திடிரென காற்றுடன் பெய்த மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ஒரு மணி நேரத்திற்கு உள்ளாகவே தோட்டம் முழுதிலுமிருந்த சுமார் ஐநதாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழந்து விட்டதாக தெரிவிக்கின்றனர் மூக்கனஅள்ளி கிராமத்து விவசாயிகள்.

விவசாயிகள் வேதனை

ஏற்பட்டுள்ள பாதிப்பை ஈடுகட்ட அரசு தங்களுக்கு எதாவது ஒரு வகையில் இழப்பீடு வழங்கினால் மட்டுமே விவசாயத்தை தொடர முடியும், இல்லையென்றால் விவசாயத்தை விட்டு விட்டு வேறு எதாதவது கூலி தொழிலுக்கு செல்வதை தவிர வேறு வழியில்லை, என கண்ணீருடன் தங்களது வேதனையை தெரிவித்துள்ளனர் விவசாயிகள்.

Share This Article
Leave a review