சாராயம் குடிச்சி செத்தவனுக்கு 10 லட்சம் , அரசு அலட்சியத்தால் உயிரிழந்த மாணவனுக்கு , வெறும் 2 லட்சம் தானா , கொதித்த கடலூர் அரசு கல்லூரி மாணவர்கள் சமாதானம் செய்த அதிகாரிகள் , பரபரப்பான தேவனாம்பட்டினம் .
ஆட்டோ கவிழ்ந்து உயிரிழந்த தேவனாம்பட்டினம் அரசு கல்லூரி மாணவனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு கேட்டு சக கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கடலூர் மாவட்டம் மணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 20) , இவர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலை கல்லூரியில் 3 ம் ஆண்டு படித்து வருகிறார் . கடந்த புதன்கிழமை அன்று தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது கல்லூரி மாணவர்கள் சிலர் கல்லூரி முடிந்து பஸ் நிலையம் செல்வதற்க ஒரு தனியார் ஆட்டோவில் பயணம் செய்தனர் .

அபோழொது அவர்கள் பயணம் செய்த ஆட்டோரிக்க்ஷா எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது . இந்த சம்பவத்தில் படும் காயம் அடைந்த தமிழ்ச்செல்வன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . இவருடன் பயணம் செய்த பிற மாணவர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர் .
அவரது இறப்பை தொடர்ந்து தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு, தமிழ்செல்வனின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்திருந்தார் .

இந்நிலையில் , உயிரிழந்த கல்லூரி மாணவர் தமிழ்ச்செல்வனின் குடும்பத்திற்கு கூடுதல் இழப்பீடு வழங்க கோரியும் , போதுமான பேருந்துக்குள் இல்லாதது தான் இவர் உயிர் இழப்புக்கு காரணம் என்று குற்றம்சாட்டி அவரது கல்லூரி மாணவர்கள் மற்றும் நண்பர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் , பெரியார் அரசு கல்லூரியில் 2000 கும் அதிகமான மாணவ மாணவிகள் படித்து வருவதாகவும் , மேலும் கல்லூரி நேரத்தில் பேருந்துகள் பற்றாக்குறை நிலவி வருவதால் மாணவர்கள் ஆட்டோக்களில் ஆபாயகரமான பயணங்களை மேற்கொள்வதாக குற்றம் சாட்டினார் .
தாங்கள் பலமுறை போதுமான போக்குவரத்துக்கு இயக்க கோரி கல்லூரி , மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வாய்த்த போதும் அவர்கள் இதனை கண்டு கொள்ளாமல் இருந்தனர் . இவர்களது அலட்சியத்தால் தான் இன்று ஒரு உயிர் பறிபோகி உள்ளதாக கூறி திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர் .

கள்ளத்தனமாக சாராயம் குடித்து உயிர் இழந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுக்கும் தமிழக அரசு , அரசின் அலட்சியத்தால் உயிரிழந்த மாணவர் தமிழ்செல்வனுக்கு வெறும் 2 லட்சம் தான் தருமா என கோஷங்களை எழுப்பினர் .
மாணவர்களின் சாலை மறியல் போராட்டடத்தை பற்றி அறிந்த கடலூர் மாவட்ட வருவாய் துறை அதிகாரி ராஜசேகர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார் ,உயிரிழந்த மாணவர் தமிழ்ச்செல்வன் குடும்பத்திற்கு கூடுதல் இழப்பீடு கிடைக்க அரசுக்கு பரிந்துரைப்பதாக உறுதியளித்தார் . மேலும் நாளை(இன்று சனிக்கிழமை) முதல் கல்லூரி நேரத்தில் கூடுதல் பேருந்து இயக்கப்படும் என அவர் உறுதியளித்தார். இதனையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.