பிரதமர் மோடி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் குறித்து விமர்சனம் – செல்லூர் ராஜு..!

2 Min Read

இந்தியாவில் வடை சுடுவது பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டில் வடை சுடுவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்.

- Advertisement -
Ad imageAd image

மதுரை 73 வது வார்டு முத்துப்பட்டி பகுதியில் பத்து லட்ச ரூபாய் செலவில் விநாயகர் கோவில் நகரில் புதிதாக சத்துணவு அங்கன்வாடி மையம் அமைக்க முன்னாள் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பூமி பூஜை நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

இதனை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்;-

தேர்தல் பத்திரம் குறித்த கேள்விக்கு தேர்தல் பத்திரம் குறித்து கவலைப்படுவது காங்கிரஸ் மற்றும் திமுக தான் எங்களிடம் அந்த அளவுக்கு நிதி இல்லை ஆனால் எங்களுக்கு கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. திமுக கூட்டணி மக்களை எதிர்க்கவில்லை.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

உடல் ரீதியாக நலம் தான் வாயிலை வடை சுடுவது இந்திய அளவில் மோடி ஜி, தமிழ்நாட்டில் நம்ம ஸ்டாலின் புது புது திட்டங்கள் வைக்க வேண்டியது போவதில்லை எத்தனை திட்டங்கள்? திமுக வந்தவுடன் ஒரு சட்டமாக இருக்காது என்று சொன்னார்கள்.

மித் என்ற விதவிதமான போதை, அசிஸ் என்று என்னென்னமோ சொல்றாங்க, காந்தி பிஸ்கட் இருக்கும் இப்போது விதவிதமான போதை வருகிறது. இந்த போதை கடத்தலால் ராமேஸ்வரம் மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களின் படுகள் அனைத்தும் பிடிக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

நான் பத்து கோரிக்கைகள் கொடுத்தேன், இதில் ஒன்று தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக கூட்டணிக்கு எத்தனை வந்தாலும் மக்கள் தெளிவாகி விட்டார்கள். மாநில முதல்வர் வடை சுடுகிறார், பாரத பிரதமரும் வடை சுடுகிறார்.

மோடி ஜி அம்மா புகழை பாடுகிறார், அம்மா புகழை பாடுவதால் தான் மோடிக்கு தான் ஓட்டு போடுவோம் என்று சொல்வோமாம் என்று நினைக்கிறார்கள். அம்மாவோட ரசிகர்களை ஏமாற்ற பார்க்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. பாஜகவை மக்கள் எத்தனை முறை வந்தாலும் ஏற்று கொள்ளமாட்டார்கள்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

ராமர் கோவில் கட்டலாம், அதை பெரிதாக மக்களிடம் கொண்டு செல்கிறார்கள். அதே மாதிரி ஒரு இந்த முறை தான் இருக்க வேண்டும் என்பது தப்பு. தமிழ்நாட்டு மக்கள்தான் எஜமானர்கள்,போதையின் தலைநகரமாக தமிழ்நாடு மாறிவிட்டது. கடந்த 2006 கலைஞர் ஆட்சியிலே பாபர் சாதிக் 4 நிறுவனத்தை தொடங்கி உள்ளர்.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் நடக்கது தான் பாப்போம், தேர்தலுக்காக தான் மதுரை எய்ம்ஸ் இப்போது கட்டப்படுகிறது. பிரதமர் வந்தபோதும் கூட மதுரை எய்ம்ஸ் பற்றி தெரிவிக்கவில்லை என்று தெரிவித்தார்.

Share This Article
Leave a review