விழுப்புரம் நகராட்சியில் ஒருவர் கடை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 51/2 லட்சம் மோசடியில் ஈடுபட்ட காங்கிரஸ் கவுன்சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், அலமேலுபுரம், வண்டிமேடு பகுதியை சேர்ந்தவர் செல்வராம். இவரது மகன் சுரேஷ்ராம். இவர் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட எஸ்.சி, எஸ்.டி பிரிவு தலைவரான இவர், விழுப்புரம் நகராட்சி பாணாம்பட்டு பகுதி 42 வது வார்டு கவுன்சிலராகவும் பணியாற்றி இருந்து வருகிறார்.

இந்த நிலையில் சுரேஷ்ராம் கடந்த 2022 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் பழைய பஸ் பேருந்து நிலையத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்ட 30 கடைகளில் ஒரு கடையை வாங்கி தர சொன்ன விழுப்புரம் மாவட்டம், கே.கே. ரோடு பகுதியை சேர்ந்த கவுசுதீன் வயது 61 என்பவருக்கு, கடை வாங்கித் தருவதாக கூறி அவரிடமிருந்து ரூபாய் ஐந்து லட்சத்து 45 ஆயிரத்து காங்கிரஸ் கவுன்சிலர் பெற்றுக் கொண்டார்.
ஆனால் அவர் கூறியபடி கவுசுதீனுக்கு கடையை பெற்று தராமல் அந்த கடையை ஏலம் எடுத்து வேறொரு நபருக்கு கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த கவுசுதீன் தன்னிடம் வாங்கிய பணத்தை திருப்பி தருமாறு சுரேஷ் ராமிடம் கேட்டதற்கு அவர் பணத்தை திருப்பி தராமல் ஏதோ ஒரு கதை சொல்லி ஏமாற்றி வந்ததாக தெரிகிறது.

பின்னர் இது குறித்து, விழுப்புரம் மாவட்ட மேற்கு போலீஸ் நிலையத்தில் கவுசுதீன் புகார் தெரிவித்தார். கொடுத்த புகாரின் பேரில் போலிசார், சுரேஷ் ராம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மேற்கொண்டு வருகின்றனர். நகராட்சியில் கடை வாங்கி தருவதாக கூறி முதியவரிடம், காங்கிரஸ் கவுன்சிலர் ரூபாய் 51/2 லட்சம் வாங்கி மோசடி செய்த சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.