பண்ருட்டியில் காங்கிரஸ் வேட்பாளர் காரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை..!

1 Min Read

பண்ருட்டிக்கு வாக்கு சேகரிக்க வந்த கடலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் காரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

- Advertisement -
Ad imageAd image

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் வேட்பாளராக விஷ்ணு பிரசாத் எம்பி போட்டியிடுகிறார். இவர் கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பண்ருட்டியில் காங்கிரஸ் வேட்பாளர் காரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை

இந்த நிலையில், பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள நேற்று நெய்வேலியில் இருந்து பண்ருட்டிக்கு காரில் வந்தார்.

அப்போது, பண்ருட்டி அருகே வடக்குத்து பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படை குழு அதிகாரி சிவகார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் வாக்கு சேகரிக்க வந்த விஷ்ணு பிரசாத்தின் காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

பறக்கும் படை அதிகாரிகள்

அதை தொடர்ந்து, அவருடன் வந்த 4 கார்களையும் முழுமையாக சோதனை செய்தனர். இந்த சோதனையில் பணம் உள்ளிட்ட பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து பண்ருட்டி பகுதியில் விஷ்ணு பிரசாத் வாக்கு சேகரித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Share This Article
Leave a review