விபத்தில் இறந்த தனது தந்தையின் இறப்பு இழப்பீட்டு தொகையை மோசடி செய்த , தென்புத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் கந்தன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் விழுப்புரம் எஸ் பி அலுவலகத்தில் இன்று புகார் அளித்தனர் .
விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனம் தாலுகா , மண்டகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் , கூலி தொழிலாளி . இவருக்கு திருமணம் நடைபெற்று மாரியம்மாள் என்ற மனைவியும் , அமுதலக்ஷ்மி என்ற மகளும் , சம்பத் (36) என்ற மகனும் உள்ளனர் . இந்நிலையில் மகாலிங்கம் கடந்த 2014 ஆம் ஆண்டில் நடந்த வாகன விபத்தில் துரதிஷ்டவசமாக உயிர் இழந்தார் .

இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு , அவரது இறப்பிற்கான காப்பீடு இழப்பீடு வழக்கு திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது .
உயிரிழந்த மகாலிங்கத்தின் குடும்பத்தின் சார்பாக திண்டிவனம் , தென்புத்தூர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் கந்தன் என்பவர் வழக்காடி வந்தார் .
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திண்டிவனம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கின் விசாரணையானது 2024 ம் ஆண்டு ஆப்ரில் மாதத்தில் நிறைவுபெற்று , பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு ,சுமார் 15 லட்சம் ரூபாய் நஷ்டஈடாக திண்டிவம் நீதிமன்றம் சார்பில் வசூலிக்கப்பட்டு , அதற்கான காசோலையை , வழக்கறிஞர் கந்தனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது .
இந்நிலையில் தான் வழக்கறிஞர் கந்தன் , நீதிமன்றம் மூலம் வழங்கப்பட்ட நஷ்டஈடு தொகை எவளோ என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தாரரிடம் தெரிவிக்காமல் , அவர்களிடம் வெறும் ரூபாய் 7 லட்சம் மட்டும் அவர்களது வங்கி கணக்கில் டெபாசிட் செய்துள்ளார் .
அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த மகாலிங்கத்தின் மகன் சம்பத் மற்றும் அவரது குடும்பத்தார் , வங்கி அதிகாரிகளிடம் விசாரித்த போது , மொத்தமாக அவர்களது வங்கிக்கணக்கில் , நஷ்டஈடு தொகை ரூபாய் 15 லட்சம் வரப்பெற்றதாகவும் . மேலும் அவர்களது காசோலை மூலம் 8 லட்சம் ரூபாய் திரும்ப பெற்று இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர் வங்கி அதிகாரிகள் .
இது தொடர்பாக வழக்கறிஞர் கந்தனிடம் கேட்டதற்கு , பணம் தன கையில் தான் உளது என்றும் , அவருக்கு சிறிது கடன் இருப்பதால் விரைவில் திருப்பி தருவதாகவும் உறுதி அளித்துள்ளார் .
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/women-and-children-are-protesting-in-meenjur-panchayat-union-kammavarpalayam-panchayat-demanding-hundred-days-work/
ஆறு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் , சென்ற வாரம் சம்பத் அவரது தாயுடன் கந்தன் வீடிற்கு பணம் குறித்து விசாரிக்க சென்ற போது , வழக்கறிஞர் கந்தன் , பாதிக்கப்பட்டவர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துவிடுவேன் என்றும் , மீதும் பணம் கேட்டு வீட்டு பக்கம் வந்தால் கொலை செய்து விடுவேன் என்றும் கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார் .
தந்தையின் இழப்பிற்கு பிறகு மிகுந்த மனவேதனையில் இருக்கும் சம்பத் , இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளார் . அவரது புகாரினை பெற்ற காவல்துறை அதிகாரிகள் ஒரு வாரத்திற்குள் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக பாதிக்கப்பட்ட சம்பத்திற்கு உறுதி அளித்துள்ளனர்.