பொன்னேரி அருள்மிகு ஸ்ரீ சிறுவாபுரி முருகன் கோவிலில் தரிசனம் செய்து ஓட்டு சேகரிக்க வந்த ஜி.கே வாசன் – கடையில் பூரி சுட்டு ஓட்டு சேகரித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், அடுத்த பொன்னேரி அருகே பிரசித்தி பெற்ற சிறுவாபுரி முருகன் கோவில். இந்த கோவிலுக்கு கடந்த காலங்களில் அதிகப்படியான அரசியல் தலைவர்கள் வர தொடங்கி விட்டனர். இதன் காரணம் இங்கு உள்ள முருகனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்று அவர்கள் எண்ணுகின்றனர்.

இதன் அடிப்படையில் இன்று திருவள்ளூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் பாலகணபதி ஆதரித்து முருகன் கோவிலில் தரிசனம் செய்து பின்பு அருகில் உள்ள கடைகளில் ஓட்டு சேகரித்தார் ஜி.கே வாசன்.
அப்போது ஒரு சிற்றுண்டி சாலையில் ஏறி அனைவருக்கும் வடை தாருங்கள் என்று கூறி அங்குள்ள எண்ணை கடாயின் அருகே சென்று பூரி சுட்டு அதை தொண்டர்களுக்கு வழங்கினார். பின்பு கடை உரிமையாளர் இடத்தில் தாமரை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.

மேலும் அவர் பேசுகையில் கடந்த காலங்களில் மோடி தமிழ் மீதும் தமிழ் நாட்டின் மீதும் அதிக பற்று உள்ளம் கொண்டவராக இருக்கிறாய் என்று கூறினார்.
மேலும் பிரதமர் மோடி இடத்தில் நாங்கள் என்ன பேசுகிறோமோ என்று தெரியாமல் மீடியாக்கள் தவறான செய்திகளை பரப்புகின்றனர் அதை மீடியாக்கள் அனுமதிக்க கூடாது என்று கூறினார்.