பழனி பேருந்து நிலையத்தில் பக்தர்கள் ஓட்டுனர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு.
தொடர் விடுமுறை மற்றும் வாரவிடுமுறை என்பதால் பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் கோவிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதுகிறது. அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இங்கு சாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இவ்வாறு வரும் பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். பழனி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அதிகளவில் பழனி பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் பழனி பேருந்து நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து பேருந்துக்கு முந்தியடிக்கும் நிலை ஏற்படுகிறது.

இந்த நிலையில் பழனி பேருந்து நிலையத்தில் மதுரையைச் சேர்ந்த பக்தர்களுக்கும், அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் பக்தர்களை ஓட்டுநர் நடத்துனர் சேர்ந்து தாக்கி உள்ளனர். இதனால் பழனி பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சியில் இருந்து வந்த அரசு பேருந்து பழனி பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்ட பனிமனைக்குச் செல்ல தயாராகி உள்ளது.
பழனி முருகன் கோவிலுக்கு விசேஷ நாட்களில் பக்தர்கள் வருகை பலமடங்கு காணப்படும். இது தெரியாமல் மதுரையைச் சேர்ந்த பக்தர்கள் பேருந்தில் ஏறியதாகவும், பயணிகளை கீழே இறங்க சொல்லிய பேருந்து நடத்துனர் கடிந்து பேசியதால் பக்தர்களுக்கும் நடத்துனர் மற்றும் ஓட்டுநருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சேர்ந்து பக்தர்களை காலணியால் தாக்கியுள்ளனர். தகராறு ஏற்பட்ட நிலையில் பேருந்து நிலையத்தில் கூட்டம் கூடியதால் பேருந்து ஓட்டுனர் பேருந்தை பனிமனைக்கு எடுத்துச் சென்றனர். ஓட்டுனரும், பக்தர்களும் தாழ்த்திக் கொண்ட சம்பவத்தால் பலனை பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.