சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் சந்தரயான்-3 வெற்றிக் கொண்டாட்டம்

1 Min Read
சந்தரயான்-3 வெற்றிக்கொண்டாட்டம்

- Advertisement -
Ad imageAd image

இந்தியா தனது விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மூலமாக செலுத்திய விண்கலம் சந்தரயான்-3 மிகத் துல்லியமாக நிலவில் லேண்டர் மற்றும் ரோவரை தரையிறக்கியது. இந்த வெற்றிகரமான நிகழ்வு காரணமாக, நிலவின் தென் துருவத்தில் இருக்கக்கூடிய கனிமங்கள், நீர் இருப்பு, வாயுக்கள் பற்றிய தகவல்களை நம்மால் சேகரிக்க முடிந்தது. உலக அளவில் இந்த ஆய்வு, பல்வேறு பெரும் பலன்களை வழங்கும் என்று எதிர்நோக்கப்படுகிறது.

உலகெங்கிலும் இருந்து பல்வேறு நாடுகளும், அதன் தலைவர்களும் இந்தியாவின் இந்த மகத்தான வெற்றிக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். விண்வெளி ஆய்வில், சீனா, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளின் வரிசையில்  இந்தியாவும் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள நிலையில், இந்தியாவின் இளைய சமுதாயம், இதனால் பெரிதும் உத்வேகம் பெற்றுள்ளது.

அறிவியல் மற்றும் விண்வெளி ஆய்வுத் துறையில், மாணவர்களின்  ஆர்வம் அதிகரித்துள்ளது என்று கூறினால், அது மிகையாகாது. இந்நிலையில், சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் சந்த்ரயான்-3 வெற்றியைக் கொண்டாடும் வகையில், மாணவ- மாணவியரின் ‘ஃப்ளாஷ் மாப்’ எனப்படும் திடீர் நடன நிகழ்வு நடத்தப்பட்டது. மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சென்னை மண்டல மக்கள் தொடர்பகம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

நேற்று மாலை 6.30 மணியளவில் பெசன்ட் நகர் கடற்கரையில் இந்த திடீர் நடன நிகழ்ச்சி சுமார் அரைமணி நேரத்திற்கு நடத்தப்பட்டது. பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், அவர்களிடையே ஒரு குறிப்பிட்ட விஷயம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் இத்தகைய திடீர் நடன நிகழ்ச்சி நடத்தப்படுவது பிரபலமடைந்து வருகிறது. அந்த வகையில், சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் சந்த்ரயான்-3 வெற்றியைக் கொண்டாடும்படியாக இந்த நிகழ்ச்சிக்கு  செய்யப்பட்டது.

Share This Article
Leave a review