ராமர் கோவில் கட்டப்பட்ட அயோத்தி பைசாபாத் தொகுதியில் வாய்ப்பு இழந்த பாஜக..!

2 Min Read

உத்தர பிரதேசத்தில் அயோத்தி கோவில் கட்டப்பட்ட பைசாபாத் தொகுதியிலேயே பாஜக தோல்வி அடைந்துள்ளது. சமாஜ்வாதி வேட்பாளர் ஆவதேஷ் பிரசாத் 554289 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். லல்லு சிங் பாஜக சார்பாக 499722 வாக்குகள் பெற்றுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

பாஜக 54567 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து உள்ளார். உத்தர பிரதேசத்தில் மொத்தம் 80 தொகுதிகள் உள்ளன. அதில் 2019 லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 71 இடங்களில் வென்றது. சமாஜ்வாதி 5 இடங்களில் வென்றது. காங்கிரஸ் வெறும் 2 இடங்களில் வென்றது.

மக்களவை தேர்தல்

உத்தரப் பிரதேசத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடந்தது. அதில் பாஜக, அப்னா தளம், லோக் தளம் போன்ற கட்சிகள் கூட்டணி வைத்தன. எதிரே காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமூல் காங்கிரஸ் ஆகியவை கூட்டணி வைத்தன. பகுஜன் சமாஜ் தனியாக போட்டியிட்டது.

உத்தர பிரதேசத்தில் மாபெரும் அரசியல் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. அங்கே பாஜகவை முந்திய இந்தியா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸின் இந்தியா கூட்டணி 43 இடங்களில் முன்னிலை பெற்று அசத்தி உள்ளது. பாஜக கூட்டணி 35 இடங்களுக்கு சென்று உள்ளது.

பாஜக கூட்டணி

அங்கே மிக மோசமான தோல்வியை பாஜக கண்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் உத்தர பிரதேசத்தில் அயோத்தி கோவில் கட்டப்பட்ட பைசாபாத் தொகுதியிலேயே பாஜக தோல்வி அடையும் நிலையில் உள்ளது. அங்கே வாக்கு சதவிகித ரீதியாகவும் பாஜக படுதோல்வியை கண்டுள்ளது.

இந்தியா இங்கே மிக அதிக அளவில் வாக்குகளை பெற்று உள்ளன. இப்படிப்பட்ட நிலையில் தான் அயோத்தி கோவில் இருக்கும் பைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வி முகம் கண்டுள்ளது. சமாஜ்வாதி வேட்பாளர் ஆவதேஷ் பிரசாத் 554289 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

காங்கிரஸ் கூட்டணி

லல்லு சிங் பாஜக சார்பாக 499722 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக 54567 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து உள்ளார். இந்த கோவில் தங்களுக்கு வெற்றியை கொடுக்கும் என்று பாஜக கருதியது. ஆனால் அந்த கோவில் உள்ள தொகுதியிலேயே பாஜக தோல்வி அடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a review