கழிவு நீர் கலந்த குடிநீர் வழங்கும் அமிர்தா கல்லூரி பொருட்களை சேதப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விடுதி மாணவர்கள்.
கோவை மாவட்டம், அருகே எட்டிமடை பகுதியில் உள்ளது அமிர்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

மேலும் அங்கு உள்ள மாணவர்கள் விடுதியில் தமிழகம், கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்கு சேர்ந்த 4000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் கோடை வெயில் தாக்கத்தின் காரணமாக குடிநீர் அந்த பகுதியில் சரிவர விநியோகம் இல்லை என்றும் மேலும் கல்லூரிக்கு வரும் குடிநீர் கழிவு நீர் கலந்து வருவதாகவும் மாணவர்கள் பலமுறை கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்து வந்தனர்.

அமிர்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மேலிடத்தில் குடிநீர் கலங்கல் தன்மை காரணத்தினால் கழிவு நீர் கலந்த குடிநீர் இருக்கும் பட்சத்தில் பலமுறை கூறி வந்த நிலையில் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் கடந்த 5 நாட்களாக மிகவும் அசுத்தம் நிறைந்த குடிநீர் வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

அப்போது விடுதி மாணவர்கள் நேற்று இரவு முதல் மாணவர்கள் கல்லூரி பொருள்களை சேதப்படுத்தி தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அந்த குடிநீர் குடிப்பதால் பல்வேறு நோய்கள் பரவுவதாகவும் குற்றம் சாட்டிய மாணவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்லூரியில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.