விழுப்புரத்தில் அய்யனார் கோயில் குளத்தை சீரமைக்க ரூ.4.20 கோடி நிதி ஒதுக்கீடு – தமிழக அரசு..!

2 Min Read

விழுப்புரம் அய்யனார் கோயில் குளம் ரூபாய் 4.20 கோடியில் நடைபாதை, பூங்கா வசதிகளுடன் சீரமைக்கப்பட உள்ளதால் பொதுமக்கள், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் விரைந்து பணிகளை துவங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

- Advertisement -
Ad imageAd image

குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் குளங்கள் வெட்டப்பட்டு கோயில்களுக்கு தீர்த்தவாரிக்கும். மழைநீரை சேமிக்கும் வகையில் மிகப்பெரிய அளவிலான குளங்கள் அந்த காலத்திலேயே வெட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. நாளடைவில் இந்த குளங்கள் பயன்பாடு இல்லாததால் பராமரிப்பு இல்லாமலும் காணப்பட்டு வருகின்றன.

ஆஞ்சநேயர் மற்றும் அய்யனார் குளம்

இந்த நிலையில் விழுப்புரம் நகரின் மையப்பகுதியில் திரு.வி.க ஆஞ்சநேயர் கோயில்பின் புறம் 4.16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது அய்யனார் குளம், நகரத்தின் சிறந்த நீர்பிடிப்பு பகுதியாக உள்ளது. மேலும் ஆஞ்சநேயர் கோயில் குளத்தில் லட்சதீப திருவிழாவில் தெப்ப உற்சவமும் நடைப்பெறும் இக்கோயில் குளம் பிரசித்தி பெற்றவையாகும்.

இந்த நிலையில் நகரில் பெய்யக்கூடிய மழைநீரும் கோயில் குளத்தில்தான் வந்து அடைந்து சேரும் மிகப்பெரிய அளவிலான இந்த கோயில் குளம் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. மேலும் இந்த குளத்து வீதியில் செல்லக்கூடிய மழைநீர் வாய்க்கால்களும் ஆக்கிரமிக்கப்பட்டு தூர்ந்து போய் உள்ளதால் தண்ணீரும் சென்றடையாமல் குடியிருப்புகளில் தண்ணீர் சேரும் நிலையில் தான் காணப்படுகிறது.

அய்யனார் குளம்

இதனால், திருவிழாக் காலங்களில் குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு தெப்ப உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். இதனை தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறைசார்பில் இக்கோயில் குளம் சீரமைக்க கோரிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் ரூ.4.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அதில் கோயில் குளத்தை சுற்றி நடைபாதைகள் மற்றும் பூங்காக்களுடன் மிகப்பெரிய அளவில் பெரும் அளவில் கோயில் குளம் சீரமைக்க திட்டம்.

இதனிடையே விழுப்புரம் நகரில் மைய பகுதியில் உள்ள இந்த கோயில் குளத்தை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள், பக்தர்கள்கோரிக்கைவிடுத்து வந்தனர். இதுகுறித்து ஆஞ்சநேயர் கோயில் பரம்பரை அறங்காவலர் குமார் கூறுகையில், தமிழக முதலமைச்சர் மு.கஸ்டாலின் தலைமையிலான அரசு தொடர்ந்து இந்து சமய அறநிலையத்து றையில் உள்ள கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்கப்பட்டும், பிரசித்தி பெற்ற கோயில் களில் கும்பாபிஷேகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆஞ்சநேயர் குளம்

அதன்படி விழுப்புரம் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் குளம் சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் துவங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில், குளத்தை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர் தற்போது நடைபயிற்சியுடன் கூடிய இந்த குளத்தை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மின் விளக்குகள் அமைக்கப்பட்டு இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இன்னும் இதற்கான ஒப்பந்தம் விடப்படவில்லை. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் நகர மக்களின் பல ஆண்டு கோரிக்கை தற்போதைய ஆட்சியில் நிறைவேற்றப்பட டுள்ளதாக தெரிவித்தனர். இதனிடையே கோவில் குளம் சீரமைப்பு பணிகள் விரைந்து துவங்கவேண்டும் எனவும், பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென்றும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Share This Article
Leave a review