அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகனின் மருமகள் சேலையில் தீ பிடித்து எரிந்ததில் படுகாயமடைந்த நிலையில் வேலூரில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கெரகோட அள்ளியைச் சேர்ந்தவர் அதிமுக முன் னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன். பாலக்கோடு தொகுதி எம்எல்ஏ.வான இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், சந்திரமோ கன், சசிமோகன் ஆகிய 2 மகன்களும், வித்யா என்ற மகளும் உள்ளனர்.
2வது மகன் சசிமோகனின் மனைவி பூர்ணிமா (30). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திரும ணம் நடந்த நிலையில், ஒரு ஆண் குழந்தை உள்ளது. கே. பி. அன்பழகனுடன் அவரின் 2 மகன்களும் கூட் டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 18ம் தேதி மாலை பூர்ணிமா வீட்டின் பூஜை அறையை சுத் தம் செய்யும் பணியில் ஈடு பட்டிருந்தார். அப்போது பூர்ணிமா பூஜை அறையில் எரிந்து கொண் டிருந்த குத்துவி ளக்கில் இருந்து பூர்ணி மாவின் நைட்டியில் தீப்பற் றியதாக தெரிகிறது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பற்றி எரிந்ததில் அதிர்ச்சி அடைந்த பூர்ணிமா கூச்சல் போட்ட நிலையில் மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அவரது சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடிச்சென்று படு காயத்துடன் கிடந்த பூர்ணிமாவை கண்டு அதிர்ச்சியடைந்தனர் , மேலும் அவர்கள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீ காயமடைந்த பூர்ணிமாவை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் பூர்ணிமா மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை பூர்ணிமா சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், பூர்ணிமாவுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆனதால் தர்மபுரி ஆர்டிஓ கீதாராணி விசாரணை நடத்தி வருகிறார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் மருமகள் பூர்ணிமாவின் இந்த கோர மரணம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .