நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் தொகுதி பங்கீடு விரைவில் ஒப்பந்தம் – செல்வப்பெருந்தகை..!

1 Min Read
செல்வப்பெருந்தகை

இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் வசீகரன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சத்தியமூர்த்திபவனில் நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

- Advertisement -
Ad imageAd image

இன்னும் 10 நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளன. தேர்தலுக்கான அறிக்கை தயாரித்தல், பிரசாரம், விருப்ப மனு தாக்கல் போன்ற ஆயத்தப்பணிகளையும் தொடங்கி உள்ளன.

செல்வப்பெருந்தகை

இதை அடுத்து, பிரதமர் மோடி மற்றும் பாஜக நிர்வாகத்தால் நாடு எப்படி சூறையாடப்படுகிறது என்பது குறித்த வீடியோவை காங்கிரஸ் மீடியா கம்யூனிகேஷன் பிரிவு தயாரித்துள்ளது. அதை செல்வப்பெருந்தகை வெளியிட்டார். பின்னர் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி;-

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஒரு பிரச்சனையும் கிடையாது. ஒவ்வொரு மாநிலமாக காங்கிரஸ் தொகுதி பங்கீட்டை முடித்து வருகின்றனர். சிவசேனா, ஆம் ஆத்மி உடன் கூட்டணி ஏற்படாது என்றனர்.

செல்வப்பெருந்தகை

கூட்டணி முடிந்து ஒப்பந்தமும் போட்டு விட்டோம். அதேபோன்று தமிழ்நாட்டிலும் ஒப்பந்தம் போடுவோம். உங்களுக்கு இனிப்பான செய்தியை சொல்லுவோம். அப்போது கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக சென்று கொண்டிருக்கிறது.

இதனால் காங்கிரஸ் எம்பி ஒருவர் அதிமுக தலைவர்களுடன் கூட்டணி பேசி வருவதாக வெளிவரும் செய்திகள் எல்லாம் ஆதாரபூர்வமானது கிடையாது. எங்களுக்கு எல்லாம் தெரியாமல் அப்படி ஒருவர் போய் பேசிவிட முடியுமா? வதந்திகளை நம்பாதீர்கள் என்றார்.

செல்வப்பெருந்தகை

மேலிட பொறுப்பாளர் வல்ல பிரசாத், ஈவிகேஎஸ்.இளங்கோவன், மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், மற்றும் நாசே ராமச்சந்திரன், ரூபி மனோகரன் எம்எல்ஏ உடன் இருந்தனர்.

Share This Article
Leave a review