தேர்தல் பிரச்சாரத்தில் அண்ணாமலைக்கு ஆட்டுக்குட்டியை அன்புடன் வழங்கிய பாசக்கார விவசாயி..!

2 Min Read

பல்லடம் அருகே தெற்கு பாளையத்தில் தேர்தல் பரப்புரைக்கு வந்த அண்ணாமலைக்கு ஆட்டுக்குட்டியை பரிசாக வழங்கிய விவசாயி. அப்போது குட்டியை தாயிடமே சேர்த்து விடுங்கள் நான் மீண்டும் வாங்கிக் கொள்கிறேன் என அன்போடு திருப்பி கொடுத்த அண்ணாமலை.

- Advertisement -
Ad imageAd image

தேர்தல் பிரச்சாரத்தில் அண்ணாமலைக்கு ஆட்டுக்குட்டியை அன்புடன் வழங்கிய பாசக்கார விவசாயி

இந்திய தேர்தல் ஆணையம் 2024 மக்களவை தேர்தலுக்கான அட்டவணையை கடந்த மாதம் வெளியிட்டது. அதன்படி, ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் ஏப்ரல் 19 அன்று வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தேர்தல் பிரச்சாரத்தில் அண்ணாமலைக்கு ஆட்டுக்குட்டியை அன்புடன் வழங்கிய பாசக்கார விவசாயி

இதனால் அனைத்து கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை கோவை லோக்சபா தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதனால் கோவை தொகுதியில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறார். அவருடன் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் பாஜக கட்சி நிர்வாகிகள் பங்கேற்று வருகின்றனர்.


தேர்தல் பிரச்சாரத்தில் அண்ணாமலைக்கு ஆட்டுக்குட்டியை அன்புடன் வழங்கிய பாசக்கார விவசாயி

கோவை பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக போட்டியிடும் அண்ணாமலை நேற்று பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 30 இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அவர் பல்லடம் அருகே தெற்கு பாளையம் என்ற கிராமத்தில் தேர்தல் பரப்புரைக்காக தனது வாகனத்தில் சென்ற போது அங்கிருந்த விவசாயி ஒருவர் அண்ணாமலைக்கு ஆட்டுக்குட்டி ஒன்றை பரிசாக அளித்தார்.

அண்ணாமலை

அதை ஆசையோடு வாங்கிக் கொண்ட அண்ணாமலை இந்தக் குட்டியை தாயிடமே சேர்த்து விடுங்கள் எனவும் இப்போது உங்களிடம் தருகிறேன். பின்னர் நான் மீண்டும் வாங்கிக் கொள்கிறேன் என அந்த விவசாயியிடமே ஆட்டுக்குட்டியை திருப்பிக் கொடுத்தார்.

அப்போது ஆட்டுக்குட்டியை அண்ணாமலைக்கு விவசாயி பரிசாக வழங்கிய போது அங்கிருந்த மக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். அண்ணாமலைக்கு விவசாயி ஆட்டுக்குட்டியை வழங்கிய சம்பவம் அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a review