நடிகை விசித்ரா

பிக் பாஸ் நடிகை விசித்ரா வெளியிட்ட தகவல்
1991-ம் ஆண்டு வெளியான பொற்கொடி என்ற படத்தின் மூலம் அறிமுகமான விசித்ரா, சத்யராஜுன் 100-வது படமாக வில்லாதி வில்லன் படத்தில் வில்லியாக நடித்திருந்தார்.படப்பிடிப்பின்போது நடிகர் கவுண்டமணியுடன் ஏற்பட்ட அனுபவம் குறித்து நடிகை விசித்ரா பேசியுள்ள வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கவுண்டமணி

தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்திலுடன் பல காமெடி காட்சிகளிலும் கவர்ச்சி வேடங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை விசித்ரா. 1991-ம் ஆண்டு வெளியான பொற்கொடி என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், சத்யராஜுன் 100-வது படமாக வில்லாதி வில்லன் படத்தில் வில்லியாக நடித்து அசத்தியிருப்பார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் விசித்ரா நடித்துள்ளார்.

விசித்ரா

திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகிய விசித்ரா தற்போது மீண்டும் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரையில் நடித்து வருகிறார். சமீபத்தில் முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட விசித்ரா பங்கேற்றிருந்தார். இதில் சினிமாவில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம், எதனால் தான் சினிமாவில் இருந்து விலகினேன் என்று பேசியிருந்தார். விசித்ராவின் இந்த பதிவு பலரின் மனதில் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.இந்நிலையில், சமீபத்தில், சினிமாவில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் குறித்து பேசிய விசித்ரா, நான் நடிகர் கவுண்டமணியோடு பல படங்களில் நடித்திருக்கிறேன். நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. பெரிய குடும்பம் திரைப்படத்தில் நடிக்க இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் எனக்கு வாய்ப்பு கொடுத்திருந்தார். அந்த படத்தின் பூஜையிலும் நான் பங்கேற்றிருந்தேன்.

நடிகை விசித்ரா

அப்போது கே.எஸ்.ரவிக்குமார் சார் வந்த கவுண்டமணி சாருக்கு ஒரு வண்ணம் சொல்ல வேண்டும் என்று கூறினார். நான் எதற்காக என்று கேட்டபோது, இல்ல நீ வந்து ஒரு வணக்கம் மட்டும் சொல்லிடேன் என்று சொல்லி அழைத்து சென்றார். நம்ம ஒரு கேரக்டருக்கு பிக்ஸ் ஆகிட்டோம். இனிமேல் நடிக்க போகிறோம். இதுக்கும் வணக்கத்திற்கும் என்ன சம்பந்தம் என்று எனக்கு தெரியவில்லை. ஆனாலும், அதன்பிறகு நான் அவருடன் சென்று கவுண்டமணி சாருக்கு வணக்கம் சொன்னேன்.அதை கேட்ட அவர் இப்போதான் வணக்கம் சொல்வீங்களா என்று கேட்டார். அவர் ஏன் அப்படி பேசினார் என்பது இன்றுவரை எனக்கு தெரியவில்லை. பொதுவாக அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. ஆனால் சினிமாவில் இதெல்லாம் சகஜகம் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here