ஜம்மு, உதம்பூரில் வசிக்கும் புலம்பெயர்ந்தோருக்கான படிவம்-எம்-ன் நடைமுறை ரத்து – இந்திய தேர்தல் ஆணையம்

0
25
இந்திய தேர்தல் ஆணையம்

நடைபெற உள்ள பொதுத் தேர்தல் 2024-ல் புலம்பெயர்ந்த காஷ்மீர் மக்கள் வாக்களிப்பதை எளிதாக்கும் ஒரு முக்கிய முடிவை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. ஜம்மு மற்றும் உதம்பூரில் வசிக்கும் பள்ளத்தாக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு படிவம்-எம்-ஐ நிரப்புவதற்கான சிக்கலான நடைமுறையை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. கூடுதலாக, ஜம்மு மற்றும் உதம்பூருக்கு வெளியே வசிக்கும் புலம்பெயர்ந்தோருக்கு (படிவம் எம் ஐ தொடர்ந்து சமர்ப்பிப்பவர்கள்), படிவம்-எம் உடன் இணைக்கப்பட்ட சான்றிதழின் சுய சான்றொப்பத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது.

இதனால் இந்த சான்றிதழை அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரியால் சான்றளிக்கும் தொந்தரவைத் தவிர்க்கிறது. தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் கியானேஷ் குமார், டாக்டர் சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு ஆணையம் இந்த முடிவை எடுத்தது.

பல காஷ்மீர் புலம்பெயர்ந்த குழுக்களிடமிருந்து பல்வேறு பிரதிநிதித்துவங்கள் பெறப்பட்டன. ஒவ்வொரு தேர்தலிலும் படிவம்-எம் ஐ நிரப்புவதில் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை முன்வைத்தனர், இது வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதில் அவர்களுக்கு நிறைய இடையூறுகளைக் கொண்டுவருகிறது. படிவம்-எம் நடைமுறை இந்த வாக்காளர்களை மற்ற வாக்காளர்களுடன் ஒப்பிடும்போது கூடுதல் அதிகாரத்துவ தடைகளுக்கு உட்படுத்துகிறது. மேலும் படிவம்-எம் நிரப்பும் செயல்முறை பெரும்பாலும் சிக்கலானது. குறிப்பிட்ட ஆவணங்கள், இடம்பெயர்வு நிலைக்கான சான்று மற்றும் ஒரு அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரியின் சான்றொப்பம் தேவைப்படுகிறது.

இந்திய தேர்தல் ஆணையம்

ஜம்மு-காஷ்மீரின் தலைமைத் தேர்தல் அதிகாரியும் 09.04.2024 அன்று அரசியல் கட்சிகளுடன் உரிய ஆலோசனையுடனும் முழு உடன்பாட்டுடனும் தனது கருத்துக்களை ஆணையத்திடம் சமர்ப்பித்தார். இந்தத் திட்டம் தொடர்பாக பல காஷ்மீர் புலம்பெயர்ந்த குழுக்களிடமிருந்து பெறப்பட்ட பிரதிநிதித்துவங்கள், அரசியல் கட்சிகளின் பின்னூட்டங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரியின் கருத்துக்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்ட பின்னர், காஷ்மீர் புலம்பெயர்ந்தோர் இடைக்கால முகாம்களில் நேரில் வாக்களிப்பதற்கும், மக்களவைக்கான பொதுத் தேர்தல் தொடர்பாக அஞ்சல் வாக்கு மூலம் வாக்களிப்பதற்கும் திட்டத்தை ஆணையம் அறிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here