காஞ்சிபுரத்தில் கஞ்சா புகைக்கும் சிறுவர்கள் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

1 Min Read
கஞ்சா புகைக்கும் சிறுவர்கள்

காஞ்சிபுரத்தில் இரு சிறுவர்கள் கஞ்சா புகைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி உள்ளது.

- Advertisement -
Ad imageAd image

இதனை தொடர்ந்து கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்பனை பல்வேறு இடங்களில் சரளமாக நடைபெற்று வருகிறது.பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் மாணவர்களை இதனை பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

கஞ்சா பயன்படுத்துவதன் மூலம் இளைஞர்கள் சீரழிவது ஒருபுறம் இருக்க, இதன் பயன்பாடு காரணமாக கொலை,  கொள்ளை, பாலியல் சீண்டல் போன்ற குற்ற நடவடிக்கைகளிலும் பல இளைஞர்கள்  ஈடுபட்டு வருகின்றனர்.

கஞ்சா பயன்படுத்துபவர்கள் பின்னணியில் பல்வேறு குற்றச் சம்பவங்கள்  நடைபெறுவது உறுதி செய்ய பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா , பீகார், உத்திர பிரதேஷ், சண்டிகர் உள்ளிட்ட பகுதியிலிருந்தும் கஞ்சா கடத்தி வரப்பட்டு இங்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தமிழக அரசை  வலியுறுத்துகின்றனர்.

Share This Article
Leave a review