சிறுமியின் பாட்டிலில் பள்ளி சிறுவர்கள் சிறுநீரை நிரப்பியதை கண்டித்து போராட்டம்!

0
44
பள்ளி சிறுவர்கள்

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இன்று பள்ளி மாணவர்கள் சிலர் வேறு சமூகத்தைச் சேர்ந்த சிறுமியின் தண்ணீர் பாட்டிலில் சிறுநீரை நிரப்பியதால் பெரும் போராட்டம் வெடித்தது.

சிறுவர்கள் தங்கள் வகுப்பு தோழியின் பையில் ஒரு காதல் கடிதத்தையும் வைத்தார்கள். இதனால், கோபமடைந்த கிராம மக்கள் சிறுவனின் வீட்டிற்குள் நுழைய முயன்றனர் மற்றும் அவர்களை தடுக்க முயன்ற போலீஸ் குழுவை கற்களால் தாக்கினர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.

“அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவி, வெள்ளிக்கிழமை தனது வகுப்பில் பை மற்றும் பாட்டிலை வைத்து விட்டு மதிய உணவுக்காக தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். திரும்பி வந்து பாட்டிலில் இருந்து குடித்தபோது துர்நாற்றம் வீசியது. சில சிறுவர்கள் சிறுநீரில் சிறுநீரை கலந்தது தெரியவந்தது” என்று கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கன்ஷியாம் சர்மா தெரிவித்தார்.

பின்னர் சிறுமி, தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி கிராம மக்கள் கொந்தளிக்கின்றனர். இன்று பள்ளி திறக்கப்பட்டதும், தாசில்தார், லுஹாரியா காவல் நிலைய பொறுப்பாளர் மற்றும் பள்ளி தலைமையாசிரியரிடம் பிரச்னையை எழுப்பினர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கிராம மக்கள் சிறுவர்கள் இருக்கும் பகுதிக்குள் நுழைந்து கற்களை வீசத் தொடங்கினர்.

அந்த பெண் இதுவரை காவல்துறையில் முறையான புகார் அளிக்காததால் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here