விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பெண்ணை கடத்தி சென்று பலாத்காரம் செய்த வாலிபரும், அவருக்கு உடத்தையாக இருந்த அவரது சகோதரரையும் செஞ்சி அனைத்து மகளிர் நிலைய போலீசார் கைது செய்தனர்.
செஞ்சி வட்டம், நங்கிலி கொண்டான் கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவர் பிளஸ் 2 முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் இவரது அண்ணன் ராஜேஷ் மூலம் செஞ்சி அடுத்த பெரும்புகை கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் வெங்கடேசன் வயது (30) என்பவருடன் கடந்த 2023 செப்டம்பர் மாதம் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. அப்போது வெங்கடேசன் அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி, நாட்டார்மங்கலம் அருகே உள்ள முட்புதருக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர் வெங்கடேசன் பலமுறை அந்த பெண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் வீடியோ கால் செய்து நிர்வாணமாக இருக்கும்படி வற்புறுத்தினார். அதனை செல்போனில் பதிவு செய்துள்ளார். பின்னர் அதனை, சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி அந்த பெண்ணை மிரட்டி தனது வீட்டிற்கு கடத்தி சென்று 3 மாதங்கள் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த வெங்கடேசன் அதனையும் வீடியோ எடுத்து தொடர்ந்து மிரட்டியுள்ளார்.
பின்னர் அந்த வீட்டில் இருந்து தப்பித்து வந்த இளம் பெண் இதுகுறித்து செஞ்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தன்னை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்ததை போல், மேலும் பல பெண்களை வெங்கடேசன் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து செல்போனில் பதிவு செய்து வைத்திருப்பதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

இகுறித்து பெரும்புகை கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது அண்ணன் புருஷோத்தமன் வயது (32), பூபாலன் வயது (40) இவரது மனைவி புஷ்பா வயது (35) ஆகிய நான்கு பேர் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தமிழ்ச்செல்வி வழக்கு பதிவு செய்தார். தொடர்ந்து வெங்கடேசன், அவரது அண்ணன் புருசோத்தமனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் பாதிக்கப்பட்ட பெண் புகார் போலீசில் புகார் அளித்தது தெரிந்தவுடன் வெங்கடேசனின் செல்போனில் இருந்து ஆபாச வீடியோக்களை அவரது அண்ணன் புருசோத்தமன் மற்றும் உறவினர்கள் அழித்துள்ளனர். இதனால் அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.